நவீன தொழில்நுட்பத்துடன் புராணக் கதை - ‘தி ஒடிஸி’ பற்றி கிறிஸ்டோபர் நோலன் தகவல்

நவீன தொழில்நுட்பத்துடன் புராணக் கதை - ‘தி ஒடிஸி’ பற்றி கிறிஸ்டோபர் நோலன் தகவல்
Updated on
1 min read

பிரபல ஹாலிவுட் இயக்​குநர் கிறிஸ்​டோபர் நோலன், 7 ஆஸ்​கர் விருதுகளை அள்​ளிய ‘ஓபன்​ஹெய்​மர்’ படத்​துக்​குப் பிறகு இயக்கியுள்ள திரைப்​படம் ‘தி ஒடிஸி’.

ஹோமரின் புகழ்​பெற்ற கிரேக்​கக் காவிய​மான ‘தி ஒடிஸி’யை மைய​மாகக் கொண்டு உரு​வாகி இருக்​கும் இப்​படத்​துக்கு உலக அளவில் எதிர்​பார்ப்பு உள்​ளது. முதன்​முறை​யாக, முழு திரைப்படமும் ஐமேக்ஸ் கேம​ரா​வால் படமாக்​கப்​பட்​டுள்ள இப்​படத்​தில், மேட் டாமன், டாம் ஹாலண்ட், ஆன் ஹாத்​வே, ஜெண்டயா, லூபிடா நியாங்​கோ, ராபர்ட் பாட்​டின்​சன், சார்​லிஸ் தெரோன் ஆகியோர் முக்​கிய வேடங்​களில் நடித்​துள்​ளனர்.

ஜூலை 17-ம் தேதி வெளி​யாக இருக்​கும் இப்​படம் பற்றி கிறிஸ்​டோபர் நோலன் கூறும்​போது, “ஒரு புகழ்​பெற்ற கதையைத் திரையில் கொண்டு வரும்​போது மிகப்​பெரிய பொறுப்​புணர்வு ஏற்படு​கிறது. மக்​கள் நேர்​மை​யான மற்​றும் வலிமை​யான படைப்பையே எதிர்​பார்க்​கிறார்​கள். அதற்​காக ஒரு படைப்​பாளி எவ்​வளவு தூரம் மெனக்​கெடு​கிறார் என்​பது​தான் முக்​கி​யம். ‘திடார்க் நைட்’ வரிசைப் படங்​களில் நான் கற்​றுக் கொண்ட பாடம் இது.

புராண காலத்து அரக்​கர்​களை​யும், அதிசய உயி​ரினங்களை​யும் ஹாலிவுட் படங்​களில் உயிர்ப்​பித்த ரே ஹாரிஹவுசன் போன்ற மேதைகளின் படங்​களைப் பார்த்து வளர்ந்த எனக்​கு, அதே போன்ற பிரம்​மாண்​ட​மான புராணக் கதையை நவீன தொழில்​நுட்​பத்​துடன் சொல்ல வேண்​டும் என்​பது நீண்ட கால ஆசை. அது இதில் நிறைவேறியிருக்கிறது. ‘ஓபன்​ஹெய்​மர்’ படத்​தின் நீளத்தை விட இது குறைவு​தான்​ ” என்​றார்​.

நவீன தொழில்நுட்பத்துடன் புராணக் கதை - ‘தி ஒடிஸி’ பற்றி கிறிஸ்டோபர் நோலன் தகவல்
‘கர’ விமர்சனம்: தனுஷ் + விக்னேஷ் ராஜா கூட்டணி சாதித்ததா, சறுக்கியதா?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in