உலக அளவில் அதிக வசூல் - முதல் இடம் பிடித்த அவெஞ்சர்ஸ்: எண்ட்​கேம்

உலக அளவில் அதிக வசூல் - முதல் இடம் பிடித்த அவெஞ்சர்ஸ்: எண்ட்​கேம்
Updated on: 
1 min read

உலகள​வில் அதிக வசூல் செய்த திரைப்​பட​மாக, ஜேம்ஸ் கேமரூன் இயக்​கத்​தில் 2009-ல் வெளி​யான ‘அவ​தார்’, முதலிடத்​தில் இருந்து வந்​தது. இப்​படம் தற்​போதைய நில​வரப்​படி, இந்​திய மதிப்​பில் ரூ.28,138 கோடி (2.923 பில்​லியன் டாலர்) வசூல் செய்​தது.

2-வது இடத்​தில் 2019-ம் ஆண்டு வெளி​யான ‘அவெஞ்​சர்​ஸ்: எண்ட்​கேம்’ படம் இருந்து வந்​தது. இந்​நிலை​யில், ‘அவெஞ்​சர்​ஸ்: எண்ட்​கேம்’ படம், ‘அவெஞ்​சர்​ஸ்: எண்ட்​கேம் என்​கோர்’ என்ற பெயரில் கடந்த செப்​.25-ல் ரீ-ரிலீஸ் செய்​யப்​பட்டு உலகள​வில் வரவேற்​பைப் பெற்​றது.

இந்​நிலை​யில், இதன் ரீ-ரிலீஸை​யும் சேர்த்​து, மொத்​த​மாக இந்​திய மதிப்​பில் ரூ.28,156 கோடி வசூல் செய்​துள்ள இப்​படம், ‘அவ​தார்’ படத்​தின் வசூலை சிறிய அளவில் முறியடித்​து, முதலிடத்​தைப் பிடித்​துள்​ளது.

உலக அளவில் அதிக வசூல் - முதல் இடம் பிடித்த அவெஞ்சர்ஸ்: எண்ட்​கேம்
“ஒவ்​வொரு படத்​துலயும் கஷ்டப்பட்டு​தான் நடிக்கிறேன்!” - ‘பத்​தா’ வெற்றி விழா​வில் விஜய் சேதுபதி தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in