

நடிகர் டாம் ஹாலண்ட் உடன் நடிகை ஸெண்டயா
பிரபல ஹாலிவுட் நடிகையான ஸெண்டயா, ஹாலிவுட் நடிகர் டாம் ஹாலண்டுடன் ‘ஸ்பைடர்மேன்: ஹோம் கம்மிங்’, ‘ஸ்பைடர்மேன்: ஃபார் பிரம் ஹோம்’, ‘ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்’, ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இருவரும் காதலித்து வருவதாகக் கூறப்பட்டது.
பின்னர் 2025-ம் ஆண்டு நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன. கடந்த மார்ச் மாதம் ஸெண்டயாவின் சிகை அலங்கார நிபுணர் ரோச், “திருமணம் ஏற்கெனவே நடந்து முடிந்துவிட்டது” என்று கூறியிருந்தார். ஆனால் ஸெண்டயாவும் டாம் ஹாலண்டும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியின்போது, “உங்கள் திருமணம் குறித்து போலியாக வெளியான ஏஐ புகைப்படங்கள் குறித்து உங்கள் குடும்பத்தினரிடம் விளக்க வேண்டி இருந்ததா ?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் “தேவையில்லை, ஏனெனில் அவர்கள் அனைவரும் அங்கே இருந்தார்கள்” என்று பதிலளித்தார்.
இந்த பதில், திருமணம் நடைபெற்றதை உறுதிப்படுத்துவதாக ரசிகர்களும் ஊடகங்களும் கருதுகின்றன. இதன் மூலம் பல மாதங்களாக சமூக வலைதளங்களில் பரவி வந்த ரகசிய திருமண வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது.