கேன்ஸ் பட விழாவில் 'ஜானி டெப்' ஆனந்த கண்ணீர்!

கேன்ஸ் பட விழாவில் 'ஜானி டெப்' ஆனந்த கண்ணீர்!
Updated on
1 min read

புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸில் உள்ள கேன்ஸ் நகரில் ஒவ்வொரு வருடமும் நடந்து வருகிறது. இந்தாண்டுக்கான 76-வது கேன்ஸ் திரைப்பட விழா நேற்று தொடங்கியது. இதில், இந்தியா சார்பில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பங்கேற்றுள்ளார்.

சிவப்பு கம்பள வரவேற்பில் இந்தியா சார்பில் ஐஸ்வர்யா ராய், அனுஷ்கா சர்மா, சாரா அலி கேன்ஸ், மிருணாள் தாக்கூர் கலந்து கொள்கின்றனர். இந்திய பிரதிநிதியாக குஷ்பு கலந்து கொள்கிறார். நடிகை ஸ்ருதிஹாசன், திரைத்துறையில் பாலின சமத்துவம் பற்றி பேசுகிறார். இந்த விழாவில், ஜானி டெப் நடித்துள்ள ‘ஜான் து பாரி' (Jeanne du Barry) படம் திரையிடப்பட்டது. பிரான்ஸ் மன்னர் 15-வது லூயிசின் வாழ்க்கையைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ள இதில் லூயிஸ் பாத்திரத்தில் ஜானி டெப் நடித்துள்ளார். மைவென் (Maiwenn) இயக்கியுள்ளார். இப்படம் திரையிட்டு முடிந்ததும் பார்வையாளர்கள் எழுந்து நின்று 7 நிமிடம் கைதட்டி பாராட்டினர். இதைக் கண்டதும் ஜானி டெப் ஆனந்தக் கண்ணீர் விட்டார். இயக்குநர் மைவென்னும் கண்ணீர் விட்டார்.

தன்னை கொடுமைப் படுத்தியதாகவும் தாக்கியதாகவும் தனது முன்னாள் மனைவி ஆம்பர் ஹெட் தொடர்ந்த வழக்கில், வெற்றிபெற்ற ஜானி டெப், அதற்கு பின் நடித்து வெளிவரும் படம் இது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in