கிறிஸ்டோபர் நோலனின் ‘ஓப்பன்ஹெய்மர்’ ஜூலை 21-ல் ரிலீஸ்

கிறிஸ்டோபர் நோலனின் ‘ஓப்பன்ஹெய்மர்’ ஜூலை 21-ல் ரிலீஸ்
Updated on
1 min read

பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஓப்பன்ஹெய்மர்’ படம் ஜூலை 21-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹாலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் கிறிஸ்டோபர் நோலன். இவர் இயக்கிய ‘மெமன்டோ’, ‘ தி ப்ரஸ்டீஜ்’, ‘இன்செப்ஷன்’, ‘இண்டெர்ஸ்டெல்லார்’ உள்ளிட்ட படங்கள் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றவை. திரைக்கதை அமைப்பில் தனக்கென்று ஒரு தனி முத்திரை பதித்தவர் நோலன். கடைசியாக கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ‘டெனெட்’ திரைப்படம் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

தற்போது நோலன் இயக்கியுள்ள ‘ஓப்பன்ஹெய்மர்’ (‘Oppenheimer’) படம், இரண்டாம் உலகப் போரின்போது அணுகுண்டு தயாரிக்க உதவிய அமெரிக்க இயற்பியலாளர் ஜே.ராபர்ட் ஒப்பன்ஹெய்மரைப் பற்றி பேசுகிறது. இப்படத்தில் ஹாலிவுட் நடிகர் சிலியன் மர்பி நடிக்கிறார். 'அயர்ன்மேன்' புகழ் ராபர்ட் டௌனி ஜூனியர், எமிலி பிளன்ட், மேட் டேமன், ஃப்ளோரன்ஸ் பக் எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே படத்தில் நடித்துள்ளது. இப்படம் வரும் ஜூலை 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இத்திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது அணு ஆயுத சோதனையை கிராபிக்ஸ் மூலம் காட்சிபடுத்துவது சரியாக இல்லை என்பதனால் படத்திற்காக உண்மையிலேயே அணு ஆயுத சோதனையை மீட்டுருவாக்கம் செய்து தத்ரூபமாகப் படம்பிடித்துவிட்டதாக இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in