ரூ.204 கோடி மதிப்பு வைர நெக்லஸ்: வியக்க வைத்த பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா | படம்: ட்விட்டர்
பிரியங்கா சோப்ரா | படம்: ட்விட்டர்
Updated on
1 min read

நடிகை பிரியங்கா சோப்ரா, தற்போது ஹாலிவுட்டில் பிசியாக இருக்கிறார். கடந்த 2018-ம் ஆண்டு பாடகர் நிக் ஜோனாஸை காதலித்து திருமணம் செய்துகொண்ட பின், அமெரிக்காவிலேயே செட்டிலாகிவிட்டார். இவர்களுக்கு வாடகைத் தாய் மூலம் பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், நியூயார்க்கில் நடந்த உலக புகழ்பெற்ற மெட் காலா ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியில் தனது கணவருடன் கலந்துகொண்டார் பிரியங்கா சோப்ரா. இந்நிகழ்ச்சிக்கு அவர் அணிந்து வந்த ஆடை மற்றும் வைர நெக்லஸ் கவனம் பெற்றன. அந்த நெக்லஸின் விலை, இந்திய மதிப்பில் ரூ.204 கோடி என்று கூறப்படுகிறது. இந்த விலை, ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in