

'என் வயதின் காரணமாக என்னை நானே கதாநாயகனாக கருதவில்லை' என பிரபல ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளூனி கூறியுள்ளார்.
56 வயதான க்ளூனி, 2014ஆம் ஆண்டு அமால் க்ளூனி என்பவரை மணந்தார். இருவருக்கும் அலெக்ஸாண்ட்ரா, எல்லா என்ற இரட்டைக் குழந்தைகள் சமீபத்தில் பிறந்துள்ளன.
2 வருடமாக நடிக்காத ஜார்ஜ் க்ளூனி, தனது வயது, தான் நடிக்கும் கதாபாத்திரங்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறியுள்ளார். அவர் மேலும் பேசுகையில், "நான் இரண்டு வருடங்களாக நடிக்கவில்லை. அடுத்த கட்டம் என்னவென்றே எனக்குத் தெரியாது. "
கேமராவுக்கு முன்னால் இருக்க வேண்டும் என்ற காரணத்துக்காக மட்டும் நான் சினிமாவில் நடிப்பதாக இல்லை. அதை நான் செய்திருக்கிறேன். வெற்றிகரமாகவும் இருந்திருக்கிறேன். நமக்கு வயதாகும்போது, வரும் கதாபாத்திரங்கள் அவ்வளவு சுவாரஸ்யமாக இருப்பதில்லை. நான் இனிமேலும் கதாநாயகன் அல்ல. நான் ஒரு பெண்ணை முத்தமிடுவதைப் பார்க்க யாரும் விரும்பமாட்டார்கள்" என்று ஜார்ஜ் க்ளூனி கூறியுள்ளார்.