‘ஹாரி பாட்டர்’ நடிகர் பால் கிரான்ட் காலமானார்

‘ஹாரி பாட்டர்’ நடிகர் பால் கிரான்ட் காலமானார்
Updated on
1 min read

பிரபல ஹாலிவுட் நடிகர் பால் கிரான்ட் (Paul Grant). ‘ஹாரி பாட்டர்’, ‘ஸ்டார் வார்ஸ்: ரிட்டர்ன் ஆஃப் தி ஜெடி’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். 4 அடி 4 அங்குலம் உயரமுள்ளவர் இவர். லண்டன் ரயில்வே நிலையம் அருகே கடந்த 16ம் தேதி இவர் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் மூளைச்சாவு அடைந்தார். இந்நிலையில் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். அவருக்கு வயது 56. அவர் இறப்பிற்கான காரணம் குறித்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் இரங்கலை தெரிவித்து வருகிறன்றனர்,

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in