சினிமாவாகிறது மைக்கேல் ஜாக்சன் வாழ்க்கை!

சினிமாவாகிறது மைக்கேல் ஜாக்சன் வாழ்க்கை!
Updated on
1 min read

பிரபல அமெரிக்க பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் கடந்த 2009-ம் ஆண்டு திடீரென மரணமடைந்தார். அவர் வாழ்க்கைக் கதை இப்போது சினிமாவாகிறது.

‘மைக்கேல்’ என்ற பெயரில் உருவாகும் இந்தப் படத்தில், மைக்கேல் ஜாக்சனின் சகோதரர் ஜெமைன் ஜாக்சனின் மகன் ஜாஃபர் ஜாக்சன், மைக்கேல் ஜாக்சனாக நடிக்கிறார். அன்டோயின் ஃபுகுவா இயக்கும் இந்தப் படத்தை ஆஸ்கர் விருதுபெற்ற ‘பொஹிமியன் ராப்சோடி’ படத்தை தயாரித்த கிரஹாம் கிங் தயாரிக்கிறார்.

அவர் கூறும்போது, “2 வருடங்களுக்கு முன்பு ஜாஃபரை சந்தித்தேன். மைக்கேல் ஜாக்சனின் ஆளுமையை இயல்பாக அவர் வெளிப்படுத்திய விதம் கண்டு வியந்தேன். மைக்கேல் ஜாக்சனாக நடிப்பதற்கான நடிகரை, உலகம் முழுவதும் தேடிய பிறகு, அதற்கான சரியான நபர் ஜாஃபர் மட்டுமே என்பது தெளிவானது” என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in