உலக அளவில் 6-வது இடம்: ஸ்பைடர் மேன் வசூலை தாண்டியது அவதார் 2

உலக அளவில் 6-வது இடம்: ஸ்பைடர் மேன் வசூலை தாண்டியது அவதார் 2
Updated on
1 min read

ஜேம்ஸ் கேமரூன் இயக்கியுள்ள ‘அவதார்: த வே ஆஃப் வாட்டர்' படம் டிச. 16-ல் வெளியானது. முதல் பாகம் மிரட்டலாக இருந்ததால், இதற்கும் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இந்நிலையில் இந்தப் படம் உலகம் முழுவதும் 1.93 பில்லியன் அமெரிக்க டாலரை வசூலித்துள்ளது. இந்திய மதிப்பில் இது, சுமார் ரூ.15,633 கோடியாக உள்ளது.

இதன் மூலம், 2021ம் ஆண்டு வெளியான ‘ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்’ படத்தின் வசூலை முந்தி இருக்கிறது. அந்தப் படம் 1.92 பில்லியன் டாலர் வசூலித்திருந்தது. அதாவது ரூ.15,552 கோடி வசூல் செய்திருந்தது. அதை முந்தியுள்ள ‘அவதார் 2’ உலக அளவில் அதிகம் வசூலித்த படங்களின் பட்டியலில் 6 வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது.

உலக அளவிலான வசூலில் கேமரூன் இயக்கிய, ‘அவதார்’ முதலிடத்திலும் ‘டைட்டானிக்’ 3-வது இடத்திலும் உள்ளது. இப்போது‘அவதார் 2’, ஆறாவது இடத்தைப் பிடித்திருக்கிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in