உருவாகிறது ‘ரஷ் ஹவர் 4’ ஜாக்கிசான் உறுதி

உருவாகிறது ‘ரஷ் ஹவர் 4’ ஜாக்கிசான் உறுதி
Updated on
1 min read

ஹாலிவுட் படமான ‘ரஷ் ஹவர் 4’ உருவாக உள்ளதாக நடிகர் ஜாக்கிசான் தெரிவித்துள்ளார்.

நடிகர் ஜாக்கிசான், ஹாலிவுட் காமெடி நடிகர் கிறிஸ் டக்கர் உட்பட பலர் நடித்து சூப்பர் ஹிட்டான ஹாலிவுட் படம், ‘ரஷ் ஹவர்’. 1998ம் ஆண்டு வெளியான இந்த ஆக்‌ஷன், காமெடி படம் சூப்பர் ஹிட்டானதை அடுத்து இதன் அடுத்தடுத்தப் பாகங்
கள் உருவாகி வரவேற்பைப் பெற்றன.

3 பாகங்கள் உருவாகியுள்ள இந்தப் படத்தின் 4வது பாகத்துக்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதாக ஜாக்கிசான் தெரிவித்துள்ளார். சவுதியில் நடக்கும் ரெட் சீ சர்வதேச திரைப் பட விழாவில் கலந்து கொண்ட ஜாக்கிசான், “4ம் பாகத்துக்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இயக்குநரை சந்தித்து ஸ்கிரிப்ட் கேட்கப் போகிறேன்”என்று தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in