ஜேம்ஸ்பாண்ட் வாய்ப்பை நிராகரித்தேன்: நடிகர் ஹியூ ஜாக்மேன் தகவல்

ஜேம்ஸ்பாண்ட் வாய்ப்பை நிராகரித்தேன்: நடிகர் ஹியூ ஜாக்மேன் தகவல்
Updated on
1 min read

பிரபல ஹாலிவுட் நடிகர் ஹியூ ஜாக்மேன். ‘எக்ஸ்-மென்’, ‘ஸ்வார்ட் பிஷ்’, ‘ஸ்கூப்’, ‘தி பிரஸ்டீஜ்’, ‘தி வோல்வரின்’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்து ‘டெட்பூல் 3’ விரைவில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் ‘ஜேம்ஸ்பாண்ட்’ கேரக்டரில் நடிக்க வந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

“எக்ஸ்-மென் படங்களில் வோல்வரின் கேரக்டரில் நடித்து வருகிறேன். ‘டெட்பூல் 3’ படத்திலும் அந்த கேரக்டரில் நடித்திருக்கிறேன். இப்போது ஜேம்ஸ்பாண்ட் கேரக்டரிலும் நடிக்க ஆரம்பித்தால், வேறு கதைகளில் நடிக்க,நேரம் கிடைக்காது. அதேநேரம் ஒரே விஷயத்தை செய்யவும் எனக்கு விருப்பம் இல்லை. பாண்ட் கேரக்டர் ஆக்‌ஷன் ஹீரோ கதையை கொண்டது. பலஅமெரிக்க படங்களின் பழமையான விஷயம்தான் அது” என்றுஹியூ ஜாக்மேன் தெரிவித்துள்ளார்.

ஜேம்ஸ்பாண்டாக நடித்த டேனியல் கிரேக், இனி அந்த கேரக்டரில் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டதால், புதிய பாண்ட் ஹீரோவை விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்க இருக்கிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in