'பவர் ரேஞ்சர்ஸ்' புகழ் நடிகர் ஜேசன் டேவிட் ஃபிராங்க் காலமானார்

ஜேசன் டேவிட் ஃபிராங்க் | படம்: ட்விட்டர்
ஜேசன் டேவிட் ஃபிராங்க் | படம்: ட்விட்டர்
Updated on
1 min read

கலிபோர்னியா: 'பவர் ரேஞ்சர்ஸ்' புகழ் நடிகர் ஜேசன் டேவிட் ஃபிராங்க் காலமானார். அவருக்கு வயது 49. பவர் ரேஞ்சர்ஸ் நட்சத்திரங்களில் கிரீன் ரேஞ்சராக நடித்ததற்காக இவர் அறியப்படுபவர். அவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என தெரிகிறது.

அவருக்கு இரண்டு மகள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த துயரமான நேரத்தில் அவரை இழந்து வாடும் அவரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் பிரைவசிக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 1993 முதல் 1996 வரை ‘மைட்டி மார்பின் பவர் ரேஞ்சர்ஸ்’ தொலைக்காட்சித் தொடரில் ஃபிராங்க், டாமி ஆலிவராக சுமார் 124 எபிசோடுகளில் நடித்தவர்.

டேக்வாண்டோ, கராத்தே போன்ற தற்காப்பு கலையில் கை தேர்ந்தவர் அவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தொழில்முறை தற்காப்பு கலை போட்டிகளில் விளையாடிய அனுபவமும் பெற்றவர். அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in