

ஸ்காட்லாந்து: ஸ்காட்லாந்து நடிகரும், ஹாரி பாட்டர் படத்தில் ஹஹ்ரிட் என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவருமான ராபி கால்ட்ரேன் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 72.
இதுகுறித்து மறைந்த ராபி கால்ட்ரேனி ஏஜெண்ட் ருபியஸ் கூறும்போது, “ராபி கால்ட்ரென் உடல் நலக்குறைவால் வெள்ளிக்கிழமை மருத்துமனையில் மரணம் அடைந்தார். ஒரு அற்புதமான நடிகராகவும், அதீத புத்திசாலியாகவும் இருந்தார். 40 ஆண்டுகளாக அவரது ஏஜெண்டாக இருந்ததை நினைத்துப் பெருமை கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
மறைவு குறித்து எழுத்தாளர் ஜே.கே.ரவ்லிங் கூறும்போது, “ராபி ஒரு நம்பமுடியாத திறமையாளர், முழுமையானவர், அவரை அறிந்துகொள்ளவும், அவருடன் பணிபுரியவும், அவருடன் சேர்ந்து சிரிக்கவும் வாய்ப்பு கிடைத்தது என் அதிர்ஷ்டம். எல்லாவற்றிற்கும் மேலாக அவரது குடும்பத்தினருக்கு எனது அன்பையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ராபி கால்ட்ரென் பல படங்களில் நடித்திருந்தாலும் ஹாரி பாட்டரில் ஹஹ்ரிட் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்ததுதான் உலகளவில் அவரை ரசிகர்களிடம் கொண்டு சென்றது. பல்வேறு டிவி தொடர்களிலும் நடித்துள்ள ராபி கால்ட்ரென் பல விருதுகளைப் பெற்றுள்ளார்.