Published : 13 Sep 2022 03:10 PM
Last Updated : 13 Sep 2022 03:10 PM

முக்கிய விருதுகளை வென்ற ‘ஸ்குவிட் கேம்’ - எம்மி விருதுகள் 2022 பட்டியல்

லீ ஜங் ஜே, ஜென்டையா

டிவி தொடர்கள் மற்றும் வெப் சீரிஸுக்காக வழங்கப்படும் எம்மி விருதுகள் ஹாலிவுட்டில் மிகவும் பிரபலம். ஆஸ்கர் விருதுக்கு இணையாக இவ்விருதுகள் பார்க்கப்படுகின்றன. 2022-ஆம் ஆண்டுக்கான எம்மி விருதுகள் லாஸ் ஏஞ்சலிஸில் வழங்கப்பட்டன. இந்த ஆண்டு எம்மி விருதுகளில் ஸ்குவிட் கேம், டெட் லாஸோ, சக்ஸ்செஸ்சன், ஒயிட் லோட்டஸ் ஆகிய தொடர்கள் அதிக விருதுகளை அள்ளியுள்ளன. முக்கிய விருதுகளின் விவரம்:

  • சிறந்த நடிகருக்கான விருதை ‘ஸ்குவிட் கேம்’ தொடரில் நடித்த லீ ஜங் ஜே-க்கு வழங்கப்பட்டுள்ளது.
  • சிறந்த நடிகைக்கான விருது ஹிபோரியாவில் நடித்த ஜென்டயாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • காமெடி தொடரில் சிறந்த நடிகைக்கான விருது, ஹேக்ஸ் தொடரில் நடித்த ஜின் ஸ்மார்ட்டுக்கு கிடைத்துள்ளது.
  • காமெடி தொடரில் சிறந்த நடிகருக்கான விருது, டெட் லாசோ தொடரில் நடித்த ஜேசன் சுடேகிஸ்-க்கு கிடைத்துள்ளது.
  • சிறந்த காமெடி தொடர் விருதை டெட் லாஸோ வென்றுள்ளது.
  • சிறந்த தொடருக்கான விருதை சக்ஸ்செஸ்சன் வென்றுள்ளது.
  • சிறந்த ஆந்தாலஜி தொடருக்கான விருதை ‘தி வைட் லோடஸ்’ வென்றுள்ளது.
  • காமெடி தொடரில் சிறந்த இயக்குனருக்கான விருது டெட் லாசோ தொடருக்காக எம்.ஜே.டெலானேவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • டிராமா தொடரில் சிறந்த இயக்குனருக்கான விருது ‘ஸ்க்விட் கேம்’ தொடருக்காக ஹ்வாங் டோங்-ஹ்யுக்-க்கு வழங்கப்பட்டுள்ளது.

விருதுப் பட்டியலின் முழு விவரம் தெரிந்துகொள்ள: எம்மி விருதுகள்

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x