முதல் நாளில் ரூ.10 கோடி வசூல் செய்து தி ஜங்கிள் புக் சாதனை

முதல் நாளில் ரூ.10 கோடி வசூல் செய்து தி ஜங்கிள் புக் சாதனை
Updated on
1 min read

'தி ஜங்கிள் புக்' திரைப்படம் வெளியான முதல் நாளே இந்தியாவில் ரூ. 10 கோடி வசூல் செய்துள்ளது. டிஸ்னி நிறுவனத்தின் தயாரிப்பான இந்தப் படத்தின் ஆங்கில, இந்தி பதிப்புகள் மட்டும் ரூ.10.09 கோடியை வசூல் செய்துள்ளது.

புகழ்பெற்ற 'தி ஜங்கிள் புக்' கதையை டிஸ்னி நிறுவனம் திரைப்படமாக வெளியிட்டுள்ளது. விமர்சகர்கள், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்தப் படம், ஆங்கிலத்தோடு, தமிழ், இந்தி என மாநில மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்தப் படம் குறித்து பேசிய வர்த்தக ஆய்வாளர் தரன் ஆதர்ஷ், "'தி ஜங்கிள் புக்' படத்துக்கு அற்புதமான துவக்கம் கிடைத்துள்ளது. 2016-ஆம் ஆண்டு வெளிவந்த இந்திப் படங்களின் முதல் நாள் வசூலை விட இது அதிகம்" என்று தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தின் இந்திப் பதிப்புக்கு இர்ஃபான் கான், பிரியங்கா சோப்ரா, நானா படேகர், ஓம் புரி உள்ளிட்டோர் குரல் கொடுத்திருந்தது கூடுதல் ஆவலை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியது.

'அயர்ன் மேன்' பட இயக்குநர் ஜான் ஃபேவ்ரூ இயக்கிய இந்தப் படத்தில், நீல் சேத்தி என்ற இந்திய வம்சாளிச் சிறுவன் மோக்லி வேடத்தில் நடித்திருந்தார். அந்த பாத்திரத்தை தவிர படத்தில் இருக்கும் அனைத்தும் கிராபிக்ஸால் உருவாக்கப்பட்டவை.

'தி ஜங்கிள் புக்' அடுத்த வாரம் தான் அமெரிக்காவில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in