மார்வெல், டிசி படங்கள்தான் சினிமாவை நாசம் செய்கின்றன -  இயக்குநர் ரோலண்ட் எம்மரிச் காட்டம்

மார்வெல், டிசி படங்கள்தான் சினிமாவை நாசம் செய்கின்றன -  இயக்குநர் ரோலண்ட் எம்மரிச் காட்டம்

Published on

மார்வெல், டிசி திரைப்படங்கள்தான் சினிமாவை நாசம் செய்கின்றன என்று ஹாலிவுட் இயக்குநர் ரோலண்ட் எம்மரிச் கொந்தளித்துள்ளார்.

‘இண்டிபெண்டென்ஸ் டே’, ‘டே ஆஃப்டர் டுமாரோ’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ரோலண்ட் எம்மரிச். இவர் இயக்கிய ‘2012’ படம் உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படம் தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. இவர் இயக்கியுள்ள ‘மூன்ஃபால்’ என்ற திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இவருடைய திரைப்படங்கள் பெரும்பாலும் இயற்கைப் பேரழிவுகளை அடிப்படையாகக் கொண்டே இருக்கும்.

சமீபத்தில் செய்தி ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள ரோலண்ட் எம்மரிச் ‘ஸ்டார் வார்ஸ்’, "மார்வெல், டிசி படங்கள்தான் சினிமாவை நாசம் செய்கின்றன” என்று கூறியுள்ளார்.

அப்பேட்டியில் மேலும் அவர், "பேரழிவுகளை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்களுக்கான சீசன் இப்போது இல்லை. காரணம் இயற்கையாகவே மார்வெல், டிசி, ஸ்டார் வார்ஸ் படங்கள் அந்த இடத்தை ஆக்கிரமித்துவிட்டன. அவை நம் சினிமா துறையை நாசமாக்கி வருகின்றன. ஏனெனில், இப்போது யாரும் அசலான திரைப்படங்களை எடுப்பதில்லை.

துணிச்சலான படங்களை எடுக்க வேண்டும். கிறிஸ்டோபர் நோலன் அதில் மாஸ்டர். அவர் தான் விரும்பும் திரைப்படங்களை எடுப்பவர்" என்று ரோலண்ட் எம்மரிச் கூறியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in