இணையத்தில் பிரபலமான ‘சேட் கேயானு’ மீம்: கேயானு ரீவ்ஸ் பதில்

இணையத்தில் பிரபலமான ‘சேட் கேயானு’ மீம்: கேயானு ரீவ்ஸ் பதில்
Updated on
1 min read

இணையத்தில் ‘சேட் கேயானு’ மீம் பிரபலமானது குறித்து நடிகர் கேயானு ரீவ்ஸ் பதில் அளித்துள்ளார்.

‘தி மேட்ரிக்ஸ்’, ‘ஸ்பீட்’, 'ஜான் விக்’ உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் கேயானு ரீவ்ஸ். தற்போது அவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட்ரிக்ஸ் 4’ வரும் டிசம்பர் 22ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

இப்படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் கேயானு ரீவ்ஸ் உள்ளிட்ட படக்குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் ‘தி லேட் ஷோ’ நிகழ்ச்சியில் கேயானு ரீவ்ஸ் கலந்து கொண்டார். இதில் தொகுப்பாளர் ஸ்டீபன் கால்பேர்ட் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அதில் இணையத்தில் பிரபலமான ‘சேட் கேயானு’ (Sad Keanu) மீம் குறித்தும் அதற்குக் காரணமான அந்தப் புகைப்படம் எடுக்கப்பட்ட பின்னணி குறித்தும் ஸ்டீபன் கால்பேர்ட் கேட்டார்.

அதற்கு பதிலளித்த கேயானு ரீவ்ஸ் கூறியதாவது:

''அப்போது நான் வெறும் சாண்ட்விச் தான் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். நான் யோசித்துக் கொண்டிருந்தேன். நான் கடுமையான பசியில் இருந்தேன். என்னுடைய BRZRKR காமிக்ஸில் கூட ஓவியர் அதைப் பயன்படுத்தப் போகிறார் என்பது எனக்குத் தெரியாது. அந்தப் புகைப்படம் ஏன் மீம் ஆனது என்று எனக்கே தெரியவில்லை''.

இவ்வாறு கேயானு ரீவ்ஸ் தெரிவித்துள்ளார்.

‘சேட் கேயானு’ மீம் 2010ஆம் ஆண்டு முதல் இணையத்தில் பிரபலமான மீமாகப் பகிரப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in