Published : 08 Dec 2021 02:37 PM
Last Updated : 08 Dec 2021 02:37 PM

'தி க்ரே மேன்' படப்பிடிப்பில் தனுஷ் - வைரலாகும் புகைப்படம்

'தி க்ரே மேன்' படப்பிடிப்பு தளத்தில் தனுஷ் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தின் பிரம்மாண்டத் தயாரிப்பாக 'தி க்ரே மேன்' என்கிற திரைப்படம் உருவாகிறது. 2009ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த மார்க் க்ரேனி என்பவர் எழுதிய ‘தி க்ரே மேன்’ என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகிறது. இதில் ரையான் காஸ்லிங், க்றிஸ் எவான்ஸ் உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இந்தப் படத்தை 'அவெஞ்சர்ஸ் இன்ஃபினிடி வார்', 'எண்ட்கேம்' உள்ளிட்ட படங்களை இயக்கிய ருஸ்ஸோ சகோதரர்கள் இயக்குகின்றனர். இந்தப் படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்து வருகிறார்.

கரோனா அச்சுறுத்தலால் இடையில் நிறுத்தப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மீண்டும் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் தனுஷ் தொடர்பான பெரும்பாலான காட்சிகள் ஏற்கெனவே எடுத்து முடிக்கப்பட்டுவிட்டன. ஒரு சில காட்சிகள் மட்டுமே எஞ்சியுள்ளன. அந்த காட்சிகளுக்கான படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக தற்போது தனுஷ் லண்டன் சென்றுள்ளார்.

'தி க்ரே மேன்' படப்பிடிப்பு தளத்தில் தனுஷ் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 'தி க்ரே மேன்' படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பும் தனுஷ் அதன் பின்னர் ‘நானே வருவேன்’ படத்தில் கவனம் செலுத்துவார் என்று கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x