மீண்டும் திரைக்கு வரும் ‘தி மேட்ரிக்ஸ்' முதல் பாகம்: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

மீண்டும் திரைக்கு வரும் ‘தி மேட்ரிக்ஸ்' முதல் பாகம்: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

Published on

'தி மேட்ரிக்ஸ்' நான்காம் பாகம் டிசம்பர் 22-ம் தேதி வெளியாவதை முன்னிட்டு அதற்கு முன்னோட்டமாக ‘தி மேட்ரிக்ஸ்' முதல் பாகத்தைத் திரையரங்குகளில் வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

1999ஆம் ஆண்டு வக்காவ்ஸ்கி சகோதரிகள் இயக்கத்தில் வெளியான படம் ‘தி மேட்ரிக்ஸ்'. கேயானு ரீவ்ஸ் நடித்த இந்தப் படம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து 2003ஆம் ஆண்டு 'தி மேட்ரிக்ஸ் ரீலோடட்' என்ற படமும், அதே ஆண்டின் இறுதியில் 'தி மேட்ரிக்ஸ் ரெவல்யூஷன்ஸ்' என்ற படமும் வெளியாகி வெற்றியைக் குவித்தன. இப்படங்களை வார்னர் பிரதர்ஸ் நிறுவனமும், வில்லேஜ் ரோட் ஷோ நிறுவனமும் இணைந்து தயாரித்தன.

ஏறக்குறைய 17 ஆண்டுகளுக்குப் பிறகு 'தி மேட்ரிக்ஸ்' படத்தின் அடுத்த பாகம் உருவாகியுள்ளது. இதில் கேயானு ரீவ்ஸ், கேரி ஆன் மோஸ் உள்ளிட்டோர் மீண்டும் நடித்துள்ளனர். இப்படம் வரும் டிசம்பர் மாதம் 22ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டுக்கு முன் ‘தி மேட்ரிக்ஸ்' முதல் பாகத்தை வெளியிட வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன்படி ‘தி மேட்ரிக்ஸ் படம் இந்தியாவில் டிசம்பர் 3 அன்று வெளியாகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in