அடுத்த ஆண்டுக்கான புதிய வெப் சிரீஸ் பட்டியல்: மார்வெல் நிறுவனம் வெளியீடு

அடுத்த ஆண்டுக்கான புதிய வெப் சிரீஸ் பட்டியல்: மார்வெல் நிறுவனம் வெளியீடு
Updated on
1 min read

அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள வெப் தொடர்களுக்கான பட்டியலை மார்வெல் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

2008ஆம் ஆண்டு வெளியான ‘அயர்ன்மேன்’ படத்தின் மூலம் தொடங்கிய மார்வெல் சினிமாட்டிக் உலகத்தின் கதை, 2019ஆம் ஆண்டு 'ஸ்பைடர்மேன் ஃபார் ஃப்ரம் ஹோம்' திரைப்படத்துடன் முடிந்தது. 11 ஆண்டுகளில், 3 கட்டங்களாக மொத்தம் 23 படங்கள் இந்த வரிசையில் வெளியாகியுள்ளன.

படங்கள் தவிர்த்து மார்வெல் சினிமாட்டிக் உலகத்தின் தொடர்ச்சியாக வெப் தொடர்களையும் மார்வெல் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அதில் ‘வாண்டாவிஷன்’, ‘லோகி’, ‘ஃபால்கன் அண்ட் தி விண்டர் சோல்ஜர்’ உள்ளிட்ட தொடர்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன. அடுத்ததாக ‘ஹாக் ஐ’ வெப் தொடர் விரைவில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் அடுத்த ஆண்டுக்கான தொடர்களின் பட்டியலை மார்வெல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் கீழ்க்காணும் தொடர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

* மூன் நைட்

* அகதா: ஹவுஸ் ஆஃப் டார்க்னெஸ்

* அயர்ன்ஹார்ட்

* ஸ்பைடர்மேன் - ஃப்ரெஷ்மேன் இயர்

* மார்வெல் ஸாம்பீஸ்

* மிஸ்.மார்வெல்

* ஷி ஹல்க்

* எக்கோ

* எக்ஸ் - மென் 97

* சீக்ரெட் இன்வேசன்

* ஐயாம் க்ரூட்

* வாட் இஃப் சீசன் 2

இதில் ‘வாட் இஃப் சீசன் 2' தவிர்த்து எவையெல்லாம் அனிமேஷன் தொடர்களாக வெளியாகவுள்ளன என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in