Published : 01 Nov 2021 13:22 pm

Updated : 01 Nov 2021 13:22 pm

 

Published : 01 Nov 2021 01:22 PM
Last Updated : 01 Nov 2021 01:22 PM

அடுத்த ஜேம்ஸ் பாண்டாக நடிக்கும் ‘சூப்பர்மேன்’?

is-henry-cavill-the-next-james-bond

‘சூப்பர்மேன்’ கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹென்றி கெவில் அடுத்த ஜேம்ஸ் பாண்ட் ஆக நடிக்கவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.

ஜேம்ஸ் பாண்ட் திரைவரிசையில் 25வது படம் 'நோ டைம் டு டை'. இந்த படத்தில் டேனியல் க்ரெய்க் ஐந்தாவது முறையாக ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படமே ஜேம்ஸ் பாண்டாக அவர் நடிக்கும் கடைசி படமாகும். கடந்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியாக வேண்டிய இந்தப் படம் கரோனா நெருக்கடியால் தொடர்ந்து பல முறை தள்ளிப்போய், ஒருவழியாக கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது. கேரி ஜோஜி ஃபுகுநாகா இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ரமி மாலெக் வில்லனாக நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து அடுத்த ஜேம்ஸ் பாண்ட் யார் என்ற கேள்வி ஹாலிவுட் ரசிகர்களிடையே எழுந்தது. இத்ரிஸ் எல்பா, டேனியல் கலூயா, ரிச்சர்ட் மேடன், டாம் ஹார்டி என பல நடிகர்களின் பெயர்கள் அடுத்த ஜேம்ஸ் பாண்ட் ஆக இருக்கலாம் என்ற யூகப் பட்டியலில் இடம்பிடித்தன.

இந்நிலையில் சூப்பர்மேன் கதாபாத்திரத்தில் நடித்துவரும் ஹென்றி கெவிலும் தற்போது இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளார். ஏற்கெனவே ஜேம்ஸ் பாண்டாக நடிப்பதில் தனக்கு இருக்கும் ஆர்வத்தை ஹென்றி பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார். ‘கேசினா ராயல்’ படத்தின் நடிகர் தேர்வில் கலந்து கொண்டவர்களில் ஹென்றி கெவிலும் ஒருவர். ஆனால் அப்போது அந்த வாய்ப்பை டேனியல் க்ரெய்க் தட்டிச் சென்று விட்டார். தற்போது ஹென்றி கெவில் அடுத்த ஜேம்ஸ் பாண்டாக நடிக்கவுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

ஆனால் அடுத்த ஜேம்ஸ் பாண்ட் தொடர்பான நடிகர் தேர்வு 2022ஆம் ஆண்டுதான் தொடங்கவுள்ளது என்று அறிவித்த இந்த வதந்திக்கு படக்குழு முற்றுப் புள்ளி வைத்துள்ளது.


தவறவிடாதீர்!


James BondHenry CavillDaniel CraigIdris Elba Daniel Kaluuya Richard Madden Tom Hardy Michael Fassbenderசூப்பர்மேன்ஹென்றி கெவில்ஜேம்ஸ் பாண்ட்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x