'போலி துப்பாக்கி'யில் குண்டு பாய்ந்து ஒளிப்பதிவாளர் பலி: மிஷன் இம்பாஸிபிள் நடிகர் படப்பிடிப்பில் அதிர்ச்சி

'போலி துப்பாக்கி'யில் குண்டு பாய்ந்து ஒளிப்பதிவாளர் பலி: மிஷன் இம்பாஸிபிள் நடிகர் படப்பிடிப்பில் அதிர்ச்சி
Updated on
1 min read

நடிகர் அலெக் பால்ட்வின் நடிப்பில் உருவாகி வரும் 'ரஸ்ட்' என்கிற திரைப்படத்தின் படப்பிடிப்பில் போலி என்று நினைத்த துப்பாக்கியில் இருந்து குண்டு பாய்ந்ததில் படத்தின் ஒளிப்பதிவாளர் பலியானார். இயக்குநர் படுகாயமடைந்தார்.

ஹாலிவுட்டில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் அலெக் பால்ட்வின். இவர் நடித்து, இணைந்து தயாரிக்கும் படம் 'ரஸ்ட்'. இந்தப் படப்பிடிப்பு நியூ மெக்ஸிகோவின், சாண்டா ஃபே பகுதியில் நடைபெற்று வந்தது. இந்த இடத்தில் ஏற்கெனவே பல ஹாலிவுட் திரைப்படப் படப்பிடிப்புகள் நடந்துள்ளன.

இதில் படப்பிடிப்புக்காக போலியான ஒரு துப்பாக்கி வைக்கப்பட்டிருந்தது. வெடித்தால் சப்தம் மட்டும் வருவது போன்ற இந்தத் துப்பாக்கியை நடிகர் அலெக் பால்ட்வின் இயக்கத்தில் உண்மையாகவே அதிலிருக்கும் குண்டு பாய்ந்துள்ளது. இதில் படத்தின் ஒளிப்பதிவாளர் ஹலினா ஹட்சின்ஸ் மற்றும் இயக்குநர் ஜோயல் சோஸா இருவரும் படுகாயமடைந்தனர்.

42 வயதான ஹட்சின்ஸ் காயம் காரணமாக மரணமடைந்தார். சோஸாவுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை இந்தச் சம்பவம் குறித்து யார் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. படப்பிடிப்பில் இருந்த சாட்சிகளிடம் விசாரணை நடந்து வருகிறது. இது விபத்துதான் என்று படக்குழுவினரும், ஹாலிவுட் வட்டாரங்களும் தெரிவித்துள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in