Published : 02 Sep 2021 11:22 AM
Last Updated : 02 Sep 2021 11:22 AM

டிசி ரசிகர்களுக்கான உலகளாவிய நிகழ்ச்சி: முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றன

உலகம் முழுவதுமுள்ள டிசி ரசிகர்களை ஒன்றிணைத்து நடக்கும் ‘டிசி ஃபேன்டோம் 2021’ என்ற நிகழ்ச்சிக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

டிசி காமிக்ஸின் அடுத்த தயாரிப்புகள் பற்றிய அறிவிப்புகள், முன்னோட்டங்கள், புதிய கதாபாத்திரங்கள் அறிமுகம் ஆகியவற்றை உள்ளடக்கிய 'டிசி ஃபேன்டோம்' என்ற பொது நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடப்பது வழக்கம். கரோனா தொற்றால் கடந்த ஆண்டு இணைய வழியில் நடந்த இந்த நிகழ்ச்சி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. அந்த வகையில் இந்த ஆண்டும் இணைய வழியிலேயே இந்நிகழ்ச்சியை நடத்த டிசி நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த செவ்வாய் (ஆக.31) அன்று வெளியானது.

உலகம் முழுவதுமுள்ள டிசி ரசிகர்களை ஒன்றிணைத்து நடக்கும் ‘டிசி ஃபேன்டோம் 2021’ என்ற நிகழ்ச்சி வரும் அக்டோபர் 16 அன்று நடைபெற உள்ளது. கிட்டத்தட்ட 24 மணி நேரம் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் டிசி படங்களின் நடிகர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு ரசிகர்களுடன் உரையாடுவர். மேலும் இதில் புதிய படங்கள், வெப் சீரிஸ், வீடியோ கேம்ஸ் குறித்த அறிவிப்புகளும் இடம்பெறும். இந்நிகழ்ச்சி யூடியூப், ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களிலும் நேரலை செய்யப்படும். இதில் கலந்துகொள்ள கட்டணம் எதுவும் தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்நிகழ்ச்சியில் ராபர்ட் பேட்டின்சன் நடித்துவரும் புதிய ‘பேட்மேன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இது தவிர ‘தி ஃப்ளாஷ்’, ‘சூப்பர்கேர்ள்’, ‘பேட்வுமன்’ உள்ளிட்ட தொடர்கள் குறித்த அப்டேட்களையும் டிசி நிறுவனம் வெளியிடவுள்ளதாகத் தெரிகிறது.

சமீபத்தில் வெளியான ‘தி சூசைட் ஸ்குவாட்’ படம் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில் டிசி நிறுவனத்தின் இந்த அறிவிப்பு டிசி ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x