ஆண் குழந்தைக்குத் தாயானார் நடிகை ஸ்கார்லெட் ஜொஹான்ஸன்

ஆண் குழந்தைக்குத் தாயானார் நடிகை ஸ்கார்லெட் ஜொஹான்ஸன்
Updated on
1 min read

‘பிளாக் விடோ’ நடிகை ஸ்கார்லெட் ஜொஹான்ஸனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

மார்வல் சூப்பர் ஹீரோ திரைப்படங்களில் பிளாக் விடோ கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் உலகப் புகழ் பெற்றவர் ஸ்கார்லெட் ஜொஹான்ஸன். 'தி ப்ரெஸ்டீஜ்', 'லூசி', 'ஜோஜோ ரேபிட்' உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார். சக நடிகர் ரயன் ரேனால்ட்ஸை 2008ஆம் ஆண்டு மணந்து 2011ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். பின் ரொமைன் டௌரியாக் என்கிற ஃபிரெஞ்ச் விளம்பர நிறுவனத்தின் உரிமையாளரை 2014ஆம் ஆண்டு மணந்து, 2017-ல் விவாகரத்து செய்தார்.

அதன் பிறகு 3 ஆண்டுகளாக நகைச்சுவையாளர் காலின் ஜோஸ்டைக் காதலித்து வந்த ஸ்கார்லெட் ஜொஹான்ஸன் 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அவரை எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 19) ஸ்கார்லெட் ஜொஹான்ஸன் - காலின் ஜோஸ்ட் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை காலின் ஜோஸ்ட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். குழந்தைக்கு காஸ்மோ என்று பெயரிட்டுள்ளதாவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் ஸ்கார்லெட் ஜொஹான்ஸன் - காலின் ஜோஸ்ட் தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in