ஆஸ்கர் விருது வழங்கும் மேடையில் பிரியங்கா சோப்ரா

ஆஸ்கர் விருது வழங்கும் மேடையில் பிரியங்கா சோப்ரா
Updated on
1 min read

நடப்பு ஆண்டு ஆஸ்கர் விழா விருது வழங்கும் மேடையில் தோன்றவுள்ளார் நடிகை பிரியங்கா சோப்ரா. மேடையில் விருது வழங்குபவர்கள் பட்டியலில் பிரியங்கா சோப்ராவின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

ஒவ்வொரு வருடமும் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், வெற்றிபெற்றவர்களுக்கு விருதினை தருபவர்களது பட்டியல் வெளியிடப்படும். இம்முறை அந்தப் பட்டியலில், அமெரிக்க தொலைகாட்சித் தொடரான 'குவாண்டிகோ'வில் நடித்து புகழ்பெற்றுள்ள இந்திய நடிகை பிரியங்கா சோப்ராவின் பெயரும் இடம்பெற்றுள்ளது. ஆனால் அவர் யாருக்கு விருது வழங்கவுள்ளார் என்பது இன்னும் தெரியவில்லை.

இதுகுறித்து ட்விட்டரில் மகிழ்ச்சி தெரிவித்துள்ள பிரியங்கா, "அகாடமி விழாவை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். மறக்க முடியாத இரவாக அது இருக்கும்" என்று கூறியுள்ளார்.

குவாண்டிகோ தொடரின் முதல் சீஸனில் பிரதான பாத்திரத்தில் நடித்திருந்த பிரியங்கா, அதற்காக பீப்பிள்ஸ் சாய்ஸ் விருதுகளில் விருப்பமான நடிகை என்ற விருதைப் பெற்றார். (Favorite Actress in A New TV Series)

பிரியங்கா தற்போது 'குவாண்டிகோ' தொடரின் 2-வது சீஸனில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in