

'பே வாட்ச்' திரைப்படத்தின் மூலம் ஹாலிவுட் திரைப்படங்களில் நுழைகிறார் நடிகை பிரியங்கா சோப்ரா. இந்தப் படத்தில் அவர் 'ராக்' ஜான்சனுடன் இணைந்து நடிக்கவுள்ளார்
கடந்த வருடம் 'குவாண்டிகோ' தொலைக்காட்சித் தொடர் மூலம் அமெரிக்க டிவி உலகில் கால் பதித்தார் பிரியங்கா சோப்ரா. தற்போது பே வாட்ச் மூலம் அமெரிக்க திரையுலகிலும் நுழைகிறார். 1990-களில் அமெரிக்க டிவி உலகை கலக்கிய தொடர் 'பே வாட்ச்'. இதில் நடித்த பமீலா ஆண்டர்சன் பின்னாட்களில் பெரிய நட்சத்திரமாக உருவானார்.
இந்தத் தொடரை அடிப்படையாக வைத்து உருவாகும் 'பே வாட்ச்' திரைப்படத்தில் விக்டோரியா லீட்ஸ் என்ற எதிர்மறைப் பாத்திரத்தில் பிரியங்கா நடிக்கவுள்ளார். இந்தப் படத்தின் நாயகனாக ரெஸ்ட்லிங் புகழ் 'ராக்' ஜான்சன் நடிக்கிறார்.
பிரியங்கா சோப்ராவை ராக் ஜான்சன் வரவேற்கும் ஒரு வீடியோ, ஜான்சனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. "இவர் உலகின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவர். அற்புதமான திறமை, அழகானவர், ஆபத்தானவர், பே வாட்ச் படத்துக்கு பொருத்தமானவர்" என அவரை ராக் ஜான்சன் புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.
இந்தத் திரைப்படம் 2017-ஆம் ஆண்டு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
(ராக் ஜான்சன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த வீடியோ இணைப்பு)