அமெரிக்க அதிபராக 46% ஆதரவு: ‘ராக்’ ஜான்சன் நெகிழ்ச்சி

அமெரிக்க அதிபராக 46% ஆதரவு: ‘ராக்’ ஜான்சன் நெகிழ்ச்சி
Updated on
1 min read

தான் அமெரிக்க அதிபராக வேண்டும் என்று கருத்து தெரிவித்த 46% அமெரிக்கர்களுக்கு ‘ராக்’ ஜான்சன் நன்றி தெரிவித்துள்ளார்.

மல்யுத்தப் போட்டிகளில் ராக் என்ற பெயரில் பிரபலமாகி, தற்போது ஹாலிவுட்டில் முன்னணி ஆக்‌ஷன் ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் ட்வைன் ஜான்சன். 'ஜுமான்ஜி', 'ராம்பேஜ்', 'ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்' உள்ளிட்ட எண்ணற்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். தற்போது டிசி காமிக்ஸின் ‘ப்ளாக் ஆடம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த ஒரு கருத்துக் கணிப்பில் 46% அமெரிக்கர்கள் ‘ராக்’ ஜான்சன் அமெரிக்க அதிபராக வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர். இந்தத் தகவல் சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு ட்வைன் ஜான்சன் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

''நான் என்னுடைய நாட்டை மனதார நேசிக்கிறேன். இங்கு எனக்குக் கிடைத்த வாய்ப்புகளுக்கு நான் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். நான் அரசியல்வாதியோ அல்லது அரசியலில் ஆர்வம் கொண்டவனோ அல்ல. ஆனால், 46 சதவீத அமெரிக்கர்கள் நான் அதிபராக வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்பது என்னை எழுந்து நிற்கவும், கூர்ந்து கவனிக்கவும், கற்றுக்கொள்ளவும் தூண்டுகிறது. அவர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்''.

இவ்வாறு ட்வைன் ஜான்சன் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in