எப்போதும் நீங்கள்தான் நம்பர் ஒன்: கேப்டன் அமெரிக்காவுக்குப் புகழாரம் சூட்டிய தோர்

எப்போதும் நீங்கள்தான் நம்பர் ஒன்: கேப்டன் அமெரிக்காவுக்குப் புகழாரம் சூட்டிய தோர்
Updated on
1 min read

2011ஆம் ஆண்டு வெளியான ‘கேப்டன் அமெரிக்கா: தி ஃபர்ஸ்ட் அவெஞ்சர்’ படத்தின் மூலம் மார்வெல் சினிமா உலகில் அறிமுகமானவர் க்றிஸ் எவான்ஸ். அதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே ‘ஃபென்டாஸ்டிக் 4’ படத்தில் டார்ச் கதாபாத்திரத்தில் சூப்பர் ஹீரோவாக நடித்திருந்தாலும், கேப்டன் அமெரிக்காதான் க்றிஸ் எவான்ஸைப் பட்டிதொட்டியெங்கும் கொண்டுசேர்த்தது.

2019ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ படத்தோடு மார்வெல் படங்களிலிருந்து தான் ஓய்வு பெறுவதாக அறிவித்தார் க்றிஸ் எவான்ஸ். அதன்பிறகு 2019ஆம் ஆண்டு ‘நைவ்ஸ் அவுட்’ என்ற படத்திலும் நடித்தார்.

கடந்த ஞாயிறு (13.06.21) க்றிஸ் எவான்ஸ் தனது 40-வது பிறந்த நாளைக் கொண்டாடினார். பலரும் அவரது பிறந்த நாளுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் ‘அவெஞ்சர்ஸ்’ படங்களில் க்றிஸ் எவான்ஸுடன் இணைந்து ‘தோர்’ கதாபாத்திரத்தில் நடித்த க்றிஸ் ஹெம்ஸ்வொர்த், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் க்றிஸ் எவான்ஸுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தனது பதிவில் அவர், ''இனிய 40-வது பிறந்த நாள் கிறிஸ் எவான்ஸ். என்னுடைய புத்தகத்தில் என்றென்றும் நீங்கள்தான் நம்பர் 1'' என்று கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in