'டார்ஸான்' நடிகர் ஜோ லாரா விமான விபத்தில் மரணம்?- உடல்களைத் தேடும் மீட்புக் குழு

'டார்ஸான்' படத்தில் ஜோ - மனைவி கெவ்ன் உடன் ஜோ.
'டார்ஸான்' படத்தில் ஜோ - மனைவி கெவ்ன் உடன் ஜோ.
Updated on
1 min read

1989ஆம் ஆண்டு வெளியான 'டார்ஸான் இன் மேன்ஹேட்டன்' திரைப்படத்தில் டார்ஸானாக நடித்த நடிகர் ஜோ லாரா, விமான விபத்தில் இறந்துவிட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

டென்னெஸ்ஸே விமான நிலையத்திலிருந்து ஃப்ளோரிடாவுக்குப் புறப்பட்ட சிறிய ரக விமானம் நாஷ்வில் அருகே நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் மொத்தம் 7 பேர் பயணித்ததாகவும், அனைவருமே இந்த விபத்தில் இறந்திருக்கக் கூடும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இதில் நடிகர் ஜோ லாராவும், அவரது மனைவி க்வென் எஸ்.லாராவும் அடக்கம்.

ரூத்தர்ஃபோர்ட் பகுதியிலிருக்கும் மீட்புக் குழு இந்தத் தகவலை உறுதி செய்துள்ளது. மேலும், தற்போது யாரும் உயிரோடு இருப்பதாகத் தாங்கள் கருதவில்லை என்றும், உடைந்த விமான பாகங்கள் மற்றும் அதில் பயணித்தவர்களின் உடல்களைத் தேடி வருவதாகவும் மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இப்போதைக்கு விமானத்தின் உடைந்த பாகங்கள் சிலவும், சில மனித உடல் பாகங்களும் கிடைத்துள்ளதாகத் தெரிகிறது.

'டார்ஸான்' திரைப்படத்தோடு 'அமெரிக்கன் சைபாக்: ஸ்டீல் வாரியர்', 'ஸ்டீல் ஃப்ராண்டியர்', 'ஹாலோக்ராம் மேன்' உள்ளிட்ட படங்களிலும், 'டார்ஸான் தி எபிக் அட்வென்ச்சர்ஸ்' என்கிற தொலைக்காட்சித் தொடரிலும் ஜோ நடித்துள்ளார். 1993ஆம் ஆண்டு 'பே வாட்ச்' தொடரின் ஒரு பகுதியிலும் நடித்திருந்தார்.

ஜோ லாராவும், க்வென்னும் 2018ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் சேர்ந்து கிறிஸ்தவர்கள் உடல் எடை குறைப்புக் குழு ஒன்றை ஆரம்பித்து நடத்தி வந்தனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in