மார்வெல் திரைப்படங்களின் 4-வது கட்டம்: புதிய படங்களின் பெயர்கள், வெளியீட்டுத் தேதிகள் அறிவிப்பு

மார்வெல் திரைப்படங்களின் 4-வது கட்டம்: புதிய படங்களின் பெயர்கள், வெளியீட்டுத் தேதிகள் அறிவிப்பு
Updated on
1 min read

மார்வெல் திரைப்படப் பிரபஞ்சம் என்று சொல்லப்படும் சூப்பர்ஹீரோ திரை வரிசையில் அடுத்து வெளியாகவிருக்கும் திரைப்படங்களின் பெயர்கள், வெளியீட்டுத் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

2008ஆம் ஆண்டு வெளியான ‘அயர்ன்மேன்’ படத்தின் மூலம் தொடங்கிய மார்வெல் சினிமாட்டிக் உலகத்தின் கதை, 2019ஆம் ஆண்டு 'ஸ்பைடர்மேன் ஃபார் ஃப்ரம் ஹோம்' திரைப்படத்துடன் முடிந்தது. 11 ஆண்டுகளில், 3 கட்டங்களாக மொத்தம் 23 படங்கள் இந்த வரிசையில் வெளியாகியுள்ளன.

இதன் அடுத்தகட்டமாக புதிய திரைப்படங்கள், பழைய திரைப்படங்களின் தொடர்ச்சிகள் எனப் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக மார்வெல் ஒரு காணொலியை வெளியிட்டுள்ளது. இதில் முதல் 3 கட்டங்களில் வெளியான திரைப்படங்களின் முக்கியக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. கரோனா நெருக்கடிக்குப் பிறகு அமெரிக்காவில் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலை திரும்புவதால், மீண்டும் ரசிகர்களைத் திரையரங்குக்கு வரவேற்கும் வண்ணம் இந்தக் காணொலி உருவாக்கப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டு வரை, நான்காவது கட்டத்துக்கான படங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. இதில் இதுவரை வெளியிடப்படாமல் இருந்த சில படங்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

புதிய திரைப்படங்கள், அதன் வெளியீட்டுத் தேதிகள் பின்வருமாறு:

ப்ளாக் விடோ - ஜூலை 9, 2021

ஷாங்க் சி அண்ட் தி லெஜண்ட் ஆஃப் தி டென் ரிங்ஸ் - செப்டம்பர் 3, 2021

எடர்னல்ஸ் - நவம்பர் 5, 2021

ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம் - டிசம்பர் 17, 2021

டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி மல்டிவெர்ஸ் ஆஃப் மேட்னஸ் - மார்ச் 25, 2022

தார்: லவ் அண்ட் தண்டர் - மே 6, 2022

ப்ளாக் பாந்தர் 2: வகாண்டா ஃபாரெவர் - ஜூலை 8, 2022

கேப்டன் மார்வெல் 2 / தி மார்வெல்ஸ் - நவம்பர் 11, 2022

ஆன்ட்மேன் அண்ட் தி வாஸ்ப்: குவாண்டமேனியா - பிப்ரவரி 17, 2023

கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி வால்யூம் 3 - மே 5, 2023

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in