ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பம்: டாம் ஹாலண்ட்

ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பம்: டாம் ஹாலண்ட்
Updated on
1 min read

பிரிட்டிஷ் உளவாளி ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் எதிர்காலத்தில் நடிக்கத் தனக்கு விருப்பம் இருப்பதாக நடிகர் டாம் ஹாலண்ட் கூறியுள்ளார்.

மார்வல் திரைப்படங்களில் ஸ்பைடர் மேன் கதாபாத்திரத்தில் பிரபலமானவர் டாம் ஹாலண்ட். 5 அடி 6 அங்குலம் உயரம் இருக்கும் ஹாலண்ட், தான் உயரம் குறைவான 007ஆக இருப்பேன் என்று கூறியுள்ளார்.

"திரைப்படங்களை விரும்பும் ஒரு பிரிட்டிஷ் இளைஞனாக எனக்கு ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பம்தான். அதை இங்கே அனைவரின் காதுகளுக்கும் எட்டும்படி சொல்லிக் கொள்கிறேன். அந்த உடையில் நான் நன்றாக இருப்பேன். உயரம் குறைவான ஜேம்ஸ் பாண்டாக இருப்பேன்" என்று வெரைட்டி இதழின் பாட்காஸ்டில் ஹாலண்ட் பேசியுள்ளார் .

கடைசியாக செப்டம்பர் மாதம் நெட்ஃபிளிக்ஸில் வெளியான 'தி டெவில் ஆல் தி டைம்' திரைப்படத்தில் டாம் ஹாலண்ட் நடித்திருந்தார். இதன் பிறகு 'அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்' இயக்குநர்கள் ரூஸோ சகோதரர்களின் 'செர்ரி' என்கிற படத்தில் நடித்துள்ளார். மேலும், 'கேயாஸ் வாக்கிங்' என்கிற அறிவியல் புனைவுத் திரைப்படத்திலும் நடிக்கிறார். 'ஸ்பைடர்மேன்' மூன்றாம் பாகத்தில் இதற்குப் பிறகு நடிக்கவிருக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in