Published : 31 Dec 2020 11:29 am

Updated : 31 Dec 2020 11:29 am

 

Published : 31 Dec 2020 11:29 AM
Last Updated : 31 Dec 2020 11:29 AM

‘க்ரீட்’ மூன்றாம் பாகத்தை இயக்கும் மைக்கேல் பி. ஜோர்டன்

tessa-thompson-confirms-michael-b-jordan-will-direct-creed-3

சில்வஸ்டர் ஸ்டாலோன் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘ராக்கி’ திரைப்பட வரிசையின் தொடர்ச்சியாக 2015ஆம் ஆண்டு வெளியான படம் ‘க்ரீட்’. மைக்கேல் பி.ஜோர்டன், சில்வஸ்டர் ஸ்டாலோன் ஆகியோர் நடித்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து 2018ஆம் ஆண்டு ‘க்ரீட் 2’ படம் வெளியானது.

இந்நிலையில் இப்பட வரிசையின் அடுத்த பாகத்தை தயாரிக்கும் பணியை எம்ஜிஎம் நிறுவனம் தொடங்கியுள்ளது. முந்தைய பாகங்களில் நடித்த மைக்கேல் பி.ஜோர்டன், டெஸ்ஸா தாம்ப்ஸன் ஆகியோர் இப்படங்களில் நடிக்கவுள்ளனர். மேலும் இப்படத்தை மைக்கேல் பி.ஜோர்டனே இயக்கவுள்ளார். இதனை இப்படத்தின் நாயகி டெஸ்ஸா தாம்ப்ஸன் உறுதி செய்துள்ளார்.


தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் டெஸ்ஸா இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:

‘க்ரீட்’ அடுத்த பாகத்தை மைக்கேல் இயக்கவுள்ளார். அவருக்கு இந்த ஆண்டுக்கான ‘செக்ஸியஸ்ட் மேன் அலைவ்’ என்ற பட்டம் கிடைத்துள்ளது. ஆனால் நான் இது குறித்து அவரிடம் எதுவும் கேட்கப் போவதில்லை. எனக்கு தெரியாதது போல காட்டிக் கொள்ளப் போகிறேன். மைக்கேலை நினைத்து நான் பெருமிதம் கொள்கிறேன்.

இவ்வாறு டெஸ்ஸா கூறியுள்ளார்.

தவறவிடாதீர்!


Tessa ThompsonCreed 3Michael B Jordanமைக்கேல் பி. ஜோர்டன்க்ரீட்MGM StudiosAdonis Creed

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x