கோவிட் தொற்றால் பிரபல இயக்குநர் கிம் கி டுக் காலமானார்

கோவிட் தொற்றால் பிரபல இயக்குநர் கிம் கி டுக் காலமானார்
Updated on
1 min read

சர்வதேச அளவில் பிரபலமான தென்கொரிய இயக்குநர் கிம் கி டுக் காலமானார். அவருக்கு வயது 59.

லட்வியா நாட்டில் ரிகா நகரத்தில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த கிம் கி டுக் வெள்ளிக்கிழமை அன்று காலமானதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

லட்வியா நாட்டில் வீடு வாங்க கிம் கி டுக் நவம்பர் 20ஆம் தேதி அங்கு சென்றிருந்தார். ஜுர்மலா என்கிற பகுதியில் கடல் பக்கம் இருக்கும் வீடு ஒன்றை வாங்க முடிவெடுத்த கிம், அதுபற்றிய அடுத்தடுத்த சந்திப்புகள் எதற்கும் வரவில்லை.

இதனால் அவரது நண்பர்கள் கவலையுற்று அவரை மருத்துவமனைகளில் தேட ஆரம்பித்தனர். அந்த நாட்டில் இருக்கும் தனியுரிமைப் பாதுகாப்புச் சட்டங்களால் கிம்மைக் கண்டுபிடிப்பது சிக்கலாக இருந்தது. கோவிட்-19 தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கிம் வெள்ளிக்கிழமை அதிகாலை 1.20க்குக் காலமானார்.

தெற்காசியாவிலிருந்து உலக அரங்கில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் கிம் கி டுக். ’சமாரிடன் கேர்ள்’, ’3 அயர்ன்’, ’ஒன் ஆன் ஒன்’ உள்ளிட்டப் படங்களின் மூலம் சர்வதேச கவனத்தை ஈர்த்தவர். பெர்லின் சர்வதேச திரைப்பட விழா, வெனிஸ் சர்வதேச திரைப்பட விழா, கான்ஸ் எனப் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்றவர். வெனிஸ் விழாவில் மட்டும் மூன்று விருதுகளை கிம் வென்றுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in