இதயம் செயலிழந்ததால் தான் ஷான் கானரி இறந்து போனார்: இறப்பு சான்றிதழில் தகவல்

இதயம் செயலிழந்ததால் தான் ஷான் கானரி இறந்து போனார்: இறப்பு சான்றிதழில் தகவல்
Updated on
1 min read

நடிகர் ஷான் கானரி இதயம் செயலிழந்ததால் தான் காலமானார் என்று அவரது இறப்புச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'ஜேம்ஸ் பாண்ட்' திரைப்படங்கள் மூலம் உலகப் புகழ் பெற்ற நடிகர் ஷான் கானரி கடந்த அக்டோபர் 31ஆம் தேதி தனது 90வது வயதில் காலமானார். பஹாமாஸில் இருக்கும் அவரது இல்லத்தில் அவர் உயிர் பிரிந்தது.

அவரது இறப்புச் சான்றிதழில் நிமோனியா காய்ச்சல் மற்றும் வயது மூப்பின் காரணமாக இதயம் செயலிழந்ததால் அவர் இறந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஷான் கானரியின் இதயத் துடிப்பில் பிரச்சினை இருந்தது. ஏட்ரியல் ஃபிப்ரில்லேஷன் என்கிற இந்தப் பிரச்சினைக்கு நிமோனியாவும், வயது மூப்பும் முக்கியக் காரணிகளகா உள்ளன. இதனால் இதயத் துடிப்பு அதி வேகமாகவும் சீரற்ற நிலையிலும் இருக்கும், மேலும் இது ரத்த ஒட்டத்தையும் பாதிக்கும்.

ஷான் கானரியின் அஸ்தி அவரது தாய்நாடான ஸ்காட்லாந்து முழுவதும் தூவப்படும் என்று பீப்பில் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in