யோகா பயிற்சி மிகவும் கடினமானது: ‘அக்வாமேன்’ நடிகர் பகிர்வு

யோகா பயிற்சி மிகவும் கடினமானது: ‘அக்வாமேன்’ நடிகர் பகிர்வு
Updated on
1 min read

இதுவரை தான் செய்த பயிற்சிகளிலேயே யோகாதான் மிக மிகக் கடினமானது என்று நடிகர் ஜேசன் மமோவா கூறியுள்ளார்.

‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ தொடரின் மூலம் வெளிச்சத்துக்கு வந்தவர் ஜேசன் மமோவா. அதனைத் தொடர்ந்து டிசி காமிக்ஸின் அக்வாமேன் கதாபாத்தித்தில் நடித்ததன் மூலம் உலகமெங்கும் பிரபலமானார். ஸாக் ஸ்னைடர் இயக்கத்தில் இவர் நடித்துள்ள ‘ஜஸ்டிஸ் லீக்’ திரைப்படத்தின் டீஸர் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஜேசன் மமோவா, உடற்பயிற்சிக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கக் கூடியவர். அவரது ஆஜானுபாகுவான தோற்றம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம். ஜேசனின் உடற்பயிற்சிக் காணொலிகளும் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாவது வழக்கம்.

இந்நிலையில் ஊரடங்கின்போது தனது யோகா அனுபவங்கள் குறித்துப் பகிர்ந்துள்ளார் ஜேசன் மமோவா.

இதுகுறித்து ஒரு வார இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:

''சில நாட்களுக்கு முன்பு யோகா பயிற்சியை மேற்கொண்டேன். என் வாழ்க்கையில் நான் செய்த விஷயங்களில் மிக மிகக் கடினமானது அதுதான். என்னால் ஒரு காரை இழுத்து விட முடியும். எல் கேபிடன் மலையை எளிதில் ஏறிவிட முடியும். ஆனால் இரண்டு மணி நேரம் யோகா செய்வது எனக்கு மிகவும் கடினம். என்னால் குனிய முடியவில்லை. தசைகள் இறுகிவிட்டன.

‘கோனான் தி பார்பேரியன்’ படத்துக்காக நான் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தேன். அதற்காக யோகா வகுப்புக்குச் சென்றபோது வயதான பெண்மணிகள் மூன்று பேர் தங்கள் கைகளைத் தலைக்கு மேல் உயர்த்தி யோகா செய்து கொண்டிருந்தனர். ஆனால், அது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது''.

இவ்வாறு ஜேசன் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in