ஓராண்டு ஒத்திவைக்கப்பட்ட டிஸ்னி கண்காட்சி: 2022ல் நடைபெறும் என அறிவிப்பு

ஓராண்டு ஒத்திவைக்கப்பட்ட டிஸ்னி கண்காட்சி: 2022ல் நடைபெறும் என அறிவிப்பு
Updated on
1 min read

அடுத்த வருடம் நடக்கவிருந்த டிஸ்னி நிறுவனத்தின் கண்காட்சி ஒரு வருடம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சின்னதிரை, பெரியதிரை எனப் பல்வேறு படைப்புகளைத் தயாரித்து வரும் டிஸ்னி நிறுவனம் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை பிரத்யேகக் கண்காட்சியை நடத்தும். இதில் முக்கியமான செய்திகள், பிரபல நட்சத்திரங்களின் சந்திப்புகள், வெளியாகவிருக்கும் திரைப்படங்களிலிருந்து முன்னோட்டக் காட்சிகள் என ரசிகர்களுக்குப் பல சுவாரசியமான விஷயங்கள் நிறைந்திருக்கும்.

2019-ம் ஆண்டுக்குப் பின் அடுத்த வருடம் கோடையின்போது டிஸ்னி கண்காட்சி நடப்பதாக இருந்தது. கரோனா நெருக்கடியால் பல திரைப்படங்களின் வெளியீடு தள்ளிப் போயிருக்கும் நிலையில், அடுத்த கோடையில் டிஸ்னி கண்காட்சிக்கு முக்கியத்துவம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்திருந்தது. இந்நிலையில், அடுத்த வருடம் நடக்கவிருந்த கண்காட்சியை 2022-ம் ஆண்டுக்கு ஒத்திவைக்கிறோம் என டிஸ்னி அறிவித்துள்ளது.

செப்டம்பர் 9 முதல் 11 வரை, கலிபோர்னியாவின் அனஹைம் மையத்தில் இந்தக் கண்காட்சி நடக்கும். டிஸ்னி தனது 100-வது ஆண்டைக் கொண்டாட மிகப்பெரிய அளவில் திட்டமிட்டிருப்பதால், அதுபற்றிய முக்கிய அறிவிப்புகள், கொண்டாட்டங்கள் எப்படி நடக்கும் என்பது பற்றிய விவரங்கள் வரப்போகும் கண்காட்சியில் கண்டிப்பாக இடம் பெறும் என ஹாலிவுட் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும் 2022 ஆகஸ்ட் மாதம் ஸ்டார்ஸ் வார்ஸ் கொண்டாட்டம் என்கிற நிகழ்ச்சியையும் நடத்த டிஸ்னி திட்டமிட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in