

ஜேம்ஸ்பாண்ட் திரைப்படமான ஸ்பெக்டர் படப்பிடிப்பின்போது ஒரு சண்டை காட்சிக்காக ரூ.240 கோடி மதிப்புள்ள 7 ஆஸ்டன் மார்ட்டின் டிபி10 ஸ்போர்ட்ஸ் கார்கள் வெடிவைத்து தகர்க்கப் பட்டன.
டேனியல் கிரைக் ஜேம்ஸ்பாண் டாக தோன்றும் ஸ்பெக்டர் திரைப் படம் பெரும் பொருள் செலவில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட் டுள்ளது. அடுத்த மாதம் இப்படம் திரைக்கு வருகிறது.
இந்நிலையில் இத்திரைப் படத்தின் சண்டைக் காட்சி ஒருங்கி ணைப்பாளர் கேரி பாவெல் திரைப்படம் குறித்த சுவாரசியமான தகவல்களை வெளியிட்டுள்ளார். அவர் கூறியுள்ளது: ஸ்பெக்டர் படத்தின் சண்டை காட்சிகளுக் காக கார்களை வெடிவைத்து தகர்ப்பது, மோத விட்டு நொறுக் குவது போன்றவற்றில் நாங்கள் புதிய சாதனைபடைத்து விட்டோம் என்றே கூறலாம். இத்தாலியில் காரை துரத்தும் காட்சிகள் படமாக்கப்பட்டன. அப்போது ரூ.240 கோடி மதிப் புள்ள 7 ஆஸ்டன் மார்ட்டின் ஸ்போர்ட்ஸ் கார்கள் வெடிவைத்து தகர்க்கப்பட்டன.
படத்தில் 4 நொடிகள் மட்டும் இடம் பெறும் ஒரு காட்சிக்காக ஓர் இரவு முழுவதும் படப்பிடிப்பு நடத்தினோம். மற்றொரு காட்சியில் ரோம் நகர வீதியில் அதிவேகமாக ஜாக்குவார் காரில் செல்லும் வில்லனை ஜேம்ஸ் பாண்ட் ஆஸ்டன் மார்ட்டின் காரில் துரத்துவது சிறப்பாக படமாக் கப்பட்டுள்ளது என்றார்.