நான்காவது முறையாக ஒத்திவைக்கப்பட்ட ‘டெனெட்’ படத்தின் ரிலீஸ்

நான்காவது முறையாக ஒத்திவைக்கப்பட்ட ‘டெனெட்’ படத்தின் ரிலீஸ்
Updated on
1 min read

கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘டெனெட்’. கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘டன்கிர்க்’ படத்திற்குப் பிறகு நோலன் இயக்கிய படம் இது. இப்படத்தில் ஜான் டேவிட் வாஷிங்டன், ராபர்ட் பேட்டின்சன், மைக்கேல் கெய்ன், டிம்பிள் கபாடியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் இரண்டு ட்ரெய்லர்கள் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றன. இப்படத்தை வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த மாதம் 17ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட ‘டெனெட்’ திரைப்படம் ஊரடங்கால் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. வார்னர்ஸ் பிரதர்ஸ் நிறுவனத்தின் சமூக வலைதள பக்கங்கங்களில் ரசிகர்கள் பலரும் ‘டெனெட்’ ரிலீஸ் தேதி குறித்து கேள்வியெழுப்பி வந்ததால் பின்னர் இப்படம் ஜூலை 31ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் மீண்டும் இப்படம் ஆக்ஸ்ட் 12ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கரோனா அச்சுறுத்தல் குறையாத நிலையில் திரையரங்குகள் திறக்கப்படாததால் ‘டெனெட்’ திரைப்படத்தின் வெளியீடு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வார்னர் ப்ரதர்ஸ் தலைவர் டோபி எம்மரிச் கூறும்போது, ‘விரைவில் க்றிஸ்டோபர் நோலனின் ‘டெனெட்’ படத்தின் வெளியீட்டுத் தேதியை நாங்கள் அறிவிப்போம். திரையரங்குகள் மீண்டும் பாதுகாப்பாக திறக்கப்பட்டதும் எங்கள் படங்களை திரையிடுவதே எங்கள் நோக்கம்’ என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in