

‘ஃப்ரான்கன்ஹூட்’, ‘க்ளீ’, ‘மேட் ஃபேமிலீஸ்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நயா ரிவெரா. இது தவிர்த்த பல்வேறு தொலைகாட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு கலிபோர்னியாவில் உள்ள பிரு ஏரியில் ஒரு படகை வாடகைக்கு எடுத்துக் கொண்டு தனது 4 வயது ஜோஸியுடன் சவாரி சென்றுள்ளார் நயா. அவர்கள் அங்கிருந்த சென்ற மூன்று மணி நேரங்களுக்கு பிறகு, ஏரிக்கு நடுவே நயா எடுத்துச் சென்ற படகில் அவரது மகன் ஜோஸி மட்டும் தனியாக உறங்கிக் கொண்டிருந்ததை இன்னொரு படகில் சென்ற ஒருவர் பார்த்துள்ளார். அந்த நபர் ஜோஸியை மீட்டு போலீஸிடம் ஒப்படைத்துள்ளார்.
போலீஸ் விசாரணையில், தன் தாய் நயா தண்ணீரில் நீந்தியதாகவும், அவரால் மீண்டும் படகுக்கு வரமுடியவில்லை என்றும் ஜோஸி கூறியுள்ளார். இதனால் பிரு ஏரியில் நயாவை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஏரிக்கு வெளியே உள்ள வாகன நிறுத்தத்தில் நயாவின் கார் நிறுத்தப்பட்டிருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இரு நாட்கள் தொடர் தேடுதலில் நயா கிடைக்காததால் அவர் காணாமல் போனதாக போலீஸார் அறிவித்துள்ளனர்.
நயாவின் மகன் ஜோஸிக்கு எந்த வித காயங்களும் இல்லையென்றும், தொடர்ந்து நயாவை தேடும் பணி நடந்து கொண்டிருப்பதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
தேடுதல் பணி நடந்து கொண்டிருப்பதால் பிரு ஏரியில் படகு சவாரி செய்ய பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.