நான் வெற்றி பெற்றாலும் இனவெறிக்கு ஆளாகாமல் இருந்ததில்லை: இட்ரிஸ் எல்பா

நான் வெற்றி பெற்றாலும் இனவெறிக்கு ஆளாகாமல் இருந்ததில்லை: இட்ரிஸ் எல்பா
Updated on
1 min read

தனது நட்சத்திர அந்தஸ்தால் தான் சந்தித்த இனவெறியில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்று நடிகர் இட்ரிஸ் எல்பா கூறியுள்ளார்.

'தார்', 'பசிஃபிக் ரிம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளவர் எல்பா. ஹாலிவுட்டின் கருப்பின நடிகர்களில் மிகப் பிரபலமானவர்களில் ஒருவரும் கூட. அடுத்த ஜேம்ஸ் பாண்டாக இட்ரிஸ் எல்பா தோன்றலாம் என்ற செய்திகளும் ஹாலிவுட்டில் உலா வந்துள்ளன.

இந்த நிலையில், அமெரிக்காவில் தற்போது கருப்பின மக்களுக்கு எதிராக நடந்து வரும் அநீதி குறித்து பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. இதையொட்டி இட்ரிஸ் எல்பா சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் வெள்ளையர்களை விட இரண்டு மடங்கு சிறப்பாகச் செயல்பட்டால் தான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்று சொல்லியே தான் வளர்க்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.

மேலும், "நான் வெற்றி பெற்றதால் இனவெறிக்கு ஆளாகாமல் இருந்ததில்லை. இனவெறி பற்றி என்னிடம் கேட்பது, எவ்வளவு நாட்களாக மூச்சு விடுகிறீர்கள் என்று கேட்பது போல., கருப்பின மக்கள் தங்கள் தோலின் நிறம் குறித்து உணர்வதே இனவெறியின் போதுதான். அந்த எண்ணம், நீங்கள் வெற்றி பெற்றாலும், இந்த அமைப்பில் மேலே உயர்ந்தாலும் கூட, உங்களுடனேயே இருக்கும்" என்று எல்பா கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in