‘ஸ்பைடர்-வெர்ஸ்’ இரண்டாம் பாகத்தின் தயாரிப்புப் பணிகள் தொடக்கம்

‘ஸ்பைடர்-வெர்ஸ்’ இரண்டாம் பாகத்தின் தயாரிப்புப் பணிகள் தொடக்கம்
Updated on
1 min read

மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் முக்கியக் கதாபாத்திரம் ஸ்பைடர்மேன். 2002 ஆம் ஆண்டு சாம் ரெய்மியால் புத்துயிர் கொடுக்கப்பட்டிருந்தாலும் மார்வெல் படங்களின் வரவால் ஸ்பைடர்மேன் கதாபாத்திரத்தின் புகழ் உலகமெங்கும் பரவியது.

மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் 'கேப்டன் அமெரிக்கா: சிவில் வார்’ படத்தில்தான் முதன்முதலில் ஸ்பைடர்மேன் கதாபாத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பிறகு ‘ஸ்பைடர்மேன் ஹோம்கமிங்’, ‘ஸ்பைடர்மேன் ஃபார் ஃப்ரம் ஹோம்’ ஆகியவை ஸ்பைடர்மேன் கதாபாத்திரத்துக்கென தனிப் படங்களாக வெளியியாயின.

இப்படங்கள் பெற்ற மாபெரும் வரவேற்பால் இதன் அடுத்த பாகத்தை மார்வெல் மற்றும் சோனி நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு அனிமேஷன் வடிவில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘ஸ்பைடர்-மேன்: இன் டூ தி ஸ்பைடர்-வெர்ஸ்’. இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் தயாரிப்புப் பணிகளை சோனி நிறுவனம் தொடங்கியுள்ளது. இப்படத்தின் கதையை ‘தி எக்ஸ்பாண்டபிள்ஸ்’ கதாசிரியர் டேவிட் கேல்லஹம் எழுதவுள்ளார். இப்படத்தை இயக்கும் பொறுப்பை சோனி நிறுவனம் ஹாக்கிம் டாஸ் சாண்டோஸ் என்பவரிடம் ஒப்படைத்துள்ளது.

2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகவிருந்த இப்படம் கரோனா அச்சுறுத்தல் காரணமாக அதே ஆண்டு அக்டோபர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in