மீண்டும் டாம் க்ரூஸுடன் இணையும் டக் லிமான்

மீண்டும் டாம் க்ரூஸுடன் இணையும் டக் லிமான்
Updated on
1 min read

டாம் க்ரூஸ் நடித்த ‘அமெரிக்கன் மேட்’, ‘எட்ஜ் ஆஃப் டுமாரோ’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் டக் லிமான். இது தவிர்த்து ‘போர்ன் ஐடென்டிட்டி’, ‘ஜம்பர்’, ‘Mr&Mrs ஸ்மித்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களையும் இயக்கியுள்ளார்.

‘மிஷன் இம்பாஸிபிள்’ 7 ஆம் பாகத்துக்குப் பிறகு உருவாகவுள்ள ஒரு படத்தில் மீண்டும் டாம் க்ரூஸுடன் இணையவுள்ளார் டக் லிமான்.

நாசா மற்றும் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் விண்வெளி தொடர்பான படம் ஒன்றில் டாம் க்ரூஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இன்னும் தலைப்பிடப்படாத இப்படத்தை இயக்கும் பொறுப்பு டன் லிமானிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

விண்வெளியில் படமாக்கப்படவுள்ள முதல் திரைப்படம் இது. இப்படத்தின் ஆரம்பக்கட்டப் பணிகள் கரோனா அச்சுறுத்தலால் பாதியில் நிற்கின்றன.

இப்படத்தின் கதை மற்றும் விநியோக உரிமைகள் குறித்து இன்னும் எந்த அதிகாரபூர்வ தகவல்களும் வெளியாகவில்லை.

தற்போது ‘மிஷன் இம்பாஸிபிள் 7 மற்றும் 8’ ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் டாம் க்ரூஸ் நடிப்பில் ‘டாம் கன்: மாவெரிக்’ படம் வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in