விரைவில் ஒரு மார்வெல் பெண் சூப்பர் ஹீரோ திரைப்படம்: சோனி நிறுவனம் முடிவு

விரைவில் ஒரு மார்வெல் பெண் சூப்பர் ஹீரோ திரைப்படம்: சோனி நிறுவனம் முடிவு
Updated on
1 min read

மார்வெல் காமிக்ஸின் பெண் சூப்பர் ஹீரோ கதாபாத்திரம் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு ஒரு திரைப்படத்தை உருவாக்க சோனி நிறுவனம் முடிவு செய்துள்ளது.

அது எந்தக் கதாபாத்திரம் என்று சோனி அதிகாரபூர்வமாக இதுவரை அறிவிக்கவில்லை. ஆனால் அது ஸ்பைடர்மேன் காமிக்ஸ்களில் இடம் பெற்ற ‘மேடம் வெப்’ என்ற கதாபாத்திரமாக இருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதற்காக சோனி நிறுவனம் முன்னணி நடிகைகள் சிலரிடம் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தை இயக்க மார்வெல் வெப் சீரிஸான ‘ஜெஸ்ஸிகா ஜோன்ஸ்’ இயக்குநர் எஸ்.ஜே.கிளார்க்சனை அந்நிறுவனம் அணுகியுள்ளது.

எஸ்.ஜே.கிளார்க்சன் ‘டெக்ஸ்டர்’ , ‘சக்ஸசன்’ உள்ளிட்ட வெப் சீரிஸ்களில் சில எபிசோட்களையும் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சோனி நிறுவனத்தின் அடுத்த ஆண்டுக்கான வெளியீட்டுப் பட்டியலில் ‘மார்பியஸ்’, ‘வெனம் 2’ உள்ளிட்ட படங்களும், சோனி - மார்வெல் கூட்டு தயாரிப்பில் ஒரு ‘ஸ்பைடர்மேன்’ படமும் உள்ளன. இந்நிலையில் இன்னொரு சூப்பர் ஹீரோ படத்துக்கான அறிவிப்பை சோனி வெளியிட்டுள்ளது ஹாலிவுட் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in