‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’க்குப் பிறகு மீண்டும் இணையும் பீட்டர் டின்க்லேஜ், ஜாஸன் மோமோ

‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’க்குப் பிறகு மீண்டும் இணையும் பீட்டர் டின்க்லேஜ், ஜாஸன் மோமோ
Updated on
1 min read

உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற தொடர் ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’. 8 சீசன்களை கொண்ட இத்தொடர் கடந்த ஆண்டு நிறைவு பெற்றது. இத்தொடரை எச்பிஓ நிறுவனம் தயாரித்திருந்தது. இத்தொடரில் டிரியன் லேனிஸ்டர் என்ற கதாபாத்திரத்தில் பீட்டர் டின்க்லேஜ் மற்றும் கால் டிராகோ என்ற கதாபாத்திரத்தில் ஜாஸன் மோமோ நடித்திருந்தனர்.

இந்நிலையில் இவ்விருவரும் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகவுள்ள ‘குட் பேட் அண்ட் & அன்டெட்’ என்ற படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

மனித ரத்தம் குடிக்கும் வேம்பயர்களை வேட்டையாடும் ஒருவனுக்கும், ஒரு வேம்பயருக்கும் இடையில் ஏற்படும் நட்பை அடிப்படையாகக் கொண்டது ‘குட் பேட் அண்ட் & அன்டெட்’ நாவல். இதில் வேம்பயர்களை வேட்டையாடுபவராக பீட்டர் டின்க்லேஜும், வேம்பயராக ஜாஸன் மோமோவும் நடிக்கவுள்ளனர். இப்படத்தை லெஜண்ட்ரி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ தொடருக்காக பீட்டர் டின்க்லேஜ்க்கு இதுவரை 4 எம்மி விருதுகளை வென்றுள்ளார். மேலும் ‘அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்’, ‘எக்ஸ்- மென்’ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். ஜாஸன் மோமோ டிசி காமிஸின் ‘அக்வாமேன்’ கதாபாத்திரத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in