எனது இந்த நிலைக்கு மார்வல் படங்கள்தான் காரணம்: 'விண்டர் சோல்ஜர்' நடிகர் நெகிழ்ச்சி

எனது இந்த நிலைக்கு மார்வல் படங்கள்தான் காரணம்: 'விண்டர் சோல்ஜர்' நடிகர் நெகிழ்ச்சி
Updated on
1 min read

மார்வல் திரைப்படங்கள் இல்லையென்றால் தன்னால் இவ்வளவு தூரம் ஹாலிவுட்டில் வந்திருக்க முடியாது என நடிகர் செபாஸ்டியன் ஸ்டான் கூறியுள்ளார்.

'கேப்டன் அமெரிக்கா: தி ஃபர்ஸ்ட் அவெஞ்சர்' படத்தில், பக்கி பார்ன்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் செபாஸ்டியன் ஸ்டான். தொடர்ந்து 'விண்டர் சோல்ஜர்', 'சிவில் வார்' உள்ளிட்ட அடுத்தடுத்த கேப்டன் அமெரிக்கா படங்களில் நடித்ததோடு, 'அவெஞ்சர்ஸ் இனிஃபினிடி வார்', 'எண்ட்கேம்', 'ஆன்ட் மேன்', 'ப்ளாக் பேந்தர்' உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவரது விண்டர் சோல்ஜர் கதாபாத்திரத்திற்கு பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது.

தனது திரைப் பயணம் குறித்து பேசியுள்ள ஸ்டான், "2010 ஆம் ஆண்டு நான் மார்வல் படங்களில் நடிக்க ஆரம்பித்தது எனக்கு மிகப்பெரிய வாய்ப்பு. ஒரு வகையில், அந்தப் படங்களோடுதான் ஒரு தனிநபராக நான் வளர்ந்தேன். என்னோடு சேர்ந்து அந்தக் கதாபாத்திரமும் வளர்ந்தது. ஆனால், மார்வல் படங்கள் இல்லாமல் எனக்கு மற்ற வாய்ப்புகள் கிடைத்திருக்காது. நான் இன்று இந்த நிலைக்கு வந்திருக்க முடியாது" என்று கூறியுள்ளார்.

'ஐ டோன்யா',' தி லாஸ்ட் ஃபுல் மெஷர்', 'எண்டிங்ஸ் பிகினிங்ஸ்' உள்ளிட்ட படங்களிலும் ஸ்டான் நடித்துள்ளார். அடுத்து டிஸ்னி + ஸ்ட்ரீமிங் சேவைக்காக பிரத்யேகமாக எடுக்கப்படும் 'தி ஃபேல்கன் அண்ட் தி விண்டர் சோல்ஜர்' தொடரில் ஸ்டான் நடிக்கவுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in