திருமண வாழ்வில் சமூக விலகல் ஏற்படுத்திய தாக்கம்: மனம் திறந்த ‘ராக்’ ஜான்ஸன்

திருமண வாழ்வில் சமூக விலகல் ஏற்படுத்திய தாக்கம்: மனம் திறந்த ‘ராக்’ ஜான்ஸன்
Updated on
1 min read

கடும் ஊரடங்கு காரணமாக பொதுமக்கள், பிரபலங்கள் என அனைத்துத் தரப்பினரும் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். சிலர் என்ன செய்வதென்று தெரியாமல் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் தினமும் ஏதேனும் வீடியோ அல்லது புகைப்படம் உள்ளிட்டவற்றைப் பதிவேற்றி வருகின்றனர்.

அந்த வகையில் ரசிகர்களால் ‘தி ராக்’ என்று அழைக்கப்படும் நடிகர் ட்வேய்ன் ஜான்ஸன், தன் திருமண வாழ்க்கையில் சமூக விலகல் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது குறித்துப் பேசியுள்ளார்.

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவில் ட்வேய்ன் ஜான்ஸன் கூறியிருப்பதாவது:

''இந்த அழுத்தம் மிகுந்த தருணத்தில் நானும் என் மனைவி லாரன் ஹேஷியனும் நன்றாக இருக்கிறோம். சமூக விலகல் எங்கள் திருமண வாழ்க்கையில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நேரத்தில் ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்துவதும் பாதுகாத்துக் கொள்வதும் எவ்வளவு இன்றியமையாதது என்று மிகவும் விரைவாக உணர்ந்து கொண்டோம். மாற்ற நாட்களைப் போல மூளை சுறுசுறுப்பாக செயல்படுவதில்லை. நமக்கு அடிக்கடி கோபம் வரும், சிறிய விஷயங்களுக்கு எல்லாம் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்திக் கொள்வோம்.

ஆனால் அப்படி நடக்கும்போது, உங்கள் துணைவியரின் தோள்களைப் பற்றிக் கொண்டு அவர் கண்களை நேருக்கு நேராகப் பார்த்து ‘நீ தவறு செய்யவில்லை.. நீ சரியாக செய்யவில்லை அவ்வளவுதான்’ என்று கூறுங்கள். சில விநாடிகளிலேயே இருவரும் சிரித்து விடுவீர்கள்''.

இவ்வாறு ராக் ஜான்ஸன் கூறியுள்ளார்.

https://www.instagram.com/tv/B_IEOPWluTc/?utm_source=ig_web_copy_link

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in