கரோனா பரவலை தடுக்க சிறைக் கைதிகளை விடுதலை செய்யுங்கள் - ‘ஜோக்கர்’ நடிகர் வேண்டுகோள்

கரோனா பரவலை தடுக்க சிறைக் கைதிகளை விடுதலை செய்யுங்கள் - ‘ஜோக்கர்’ நடிகர் வேண்டுகோள்
Updated on
1 min read

அமெரிக்காவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6.44 லட்சமாக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 28 ஆயிரத்து 529 ஆக அதிகரித்துள்ளது. உலகிலேயே கரோனா வைரஸுக்கு அதிகமான உயிரிழப்பைச் சந்தித்த நாடாக அமெரிக்கா மாறியுள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் கரோனா வைரஸ் பரவலை தடுக்க சிறைக் கைதிகளை விடுதலை செய்யவேண்டும் என்று ‘ஜோக்கர்’ நடிகர் ஹாக்கின் ஃபீனிக்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வீடியோ ஒன்றில் இது குறித்து ஹாக்கின் ஃபீனிக்ஸ் கூறியிருப்பதாவது:

சிறைகளில் கரோனா வைரஸ் பரவினால் நம் அனைவரின் நலனுக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக மாறும். ஒருவர் சிறையில் இருக்கும்போது சமூக விலகலுக்கும், நல்ல சத்தான உணவுக்கு வழியிருக்காது. சிறையில் இருப்பவர்களுக்கும், சிறைப் பணியாளர்களுக்கும் உடலநலக்குறைவு ஏற்படாமலும், வைரஸ் பரவாமலும் இருக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் தலைவர்கள் செய்ய வேண்டும்.

நியூயார்க் சிறையில் இருப்பவர்களுக்கு கருணை காட்டுமாறு ஆளுநர் ஆண்ட்ரூ க்யூமோவுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். அவருடைய நடவடிக்கையில்தான் பலருடைய வாழ்க்கை இருக்கிறது. சிறையில் ஒருவர் கூட கரோனாவால் சாகக் கூடாது.

இவ்வாறு ஹாக்கின் ஃபீனிக்ஸ் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in