குழந்தைகள் என்ன பார்க்கிறார்கள் என்பதைக் கட்டுப்படுத்த கூடுதல் வசதி: நெட்ஃபிளிக்ஸ் அறிமுகம்

குழந்தைகள் என்ன பார்க்கிறார்கள் என்பதைக் கட்டுப்படுத்த கூடுதல் வசதி: நெட்ஃபிளிக்ஸ் அறிமுகம்
Updated on
1 min read

கோவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் நெட்ஃபிளிக்ஸ் உள்ளிட்ட ஸ்ட்ரீமிங் தளங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை அன்று நெட்ஃபிளிக்ஸ், பெற்றோர்களுக்கான புதிய வசதிகளை அறிமுகம் செய்தது. இது, நெட்ஃபிளிக்ஸில் வயது வந்தவர்களுக்கான படங்கள், தொடர்களை, குழந்தைகள் பார்க்க விடாமல் தடுக்க உதவும்.

இனி பெற்றோர்கள், ஒரு எண்ணைப் போட்டு மற்ற ப்ரொஃபைல்களை குழந்தைகள் பயன்படுத்தாமல் பாதுகாத்துக் கொள்ளலாம். ஒவ்வொரு ப்ரொஃபைலையும் தனித்தனியாக தங்கள் விருப்பப்படி மாற்றிக் கொள்ள முடியும்.

மேலும் குழந்தைகள் எதையெல்லாம் பார்க்கக்கூடாது எனக் குறிப்பிட்ட படங்களை, தொடர்களை அவர்கள் கண்களில் படாமல் இருக்கச் செய்யலாம். தனித்தனியாக ஒரு படத்தின் பெயரைக் குறிப்பிட்டு இதைச் செய்யலாம். இப்படி முடக்கப்படும் பெயர்கள் தேடினாலும் கண்ணில் சிக்காது. குழந்தைகள் என்ன பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அவர்களின் ப்ரொஃபைலில் தெரிந்து கொள்ளலாம்.

சமீபகாலமாக நெட்ஃபிளிக்ஸ், குழந்தைகளை ஈர்க்கும் படங்கள், தொடர்களில் சர்வதேச அளவில் அதிக முதலீடு செய்து வருகிறது. குறிப்பாக இந்தியாவைப் பொறுத்தவரை, 'மைடி லிட்டில் பீம்' என்ற தொடர் உலக அளவில் நெட்ஃபிளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட குழந்தைகள் தொடர் என்ற பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

ஏப்ரல் 2019-ல் வெளியான 'மைடி லிட்டில் பீம்' இதுவரை 2.7 கோடி வீடுகளில் பார்க்கப்பட்டுள்ளதாக நெட்ஃபிளிக்ஸ் தெரிவித்துள்ளது. இதில் லத்தீன் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து உள்ளிட்ட நாடுகளும் அடங்கும்.

'கீ ஹாப்பி' என்ற புதிய அனிமேஷன் தொடரை நெட்ஃபிளிக்ஸ் அறிவித்துள்ளது. இதில் இந்துக் கடவுள்கள் குழந்தைகளாக இருக்கும்போது தங்களின் சக்திகளை எப்படித் தெரிந்து கொள்கிறார்கள் என்பது பற்றிய தொடர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in