ஜேம்ஸ் பாண்ட் நடிகை மறைவு - பிரபலங்கள் இரங்கல்

ஜேம்ஸ் பாண்ட் நடிகை மறைவு - பிரபலங்கள் இரங்கல்
Updated on
1 min read

1964ஆம் ஆண்டு வெளியான ஜேம்ஸ் பாண்ட் திரைப்படமான ‘கோல்ட்ஃபிங்கர்’ படத்தில் நாயகியாக நடித்து பிரபலமானவர் ஹானர் ப்ளாக்மேன்.

1960களில் ஒளிபரப்பான ‘தி அவெஞ்சர்ஸ்’ என்ற பிரிட்டிஷ் தொலைகாட்சி தொடரின் மூலம் அவர் உண்மையான பெயர் மறந்து போகும் அளவுக்கு கேத்தி கேல் என்ற பெயர் பிரபலமடைந்தது.

இந்நிலையில் வயது மூப்பு காரணமாக ஹானர் ப்ளாக்மேன் இங்கிலாந்தின் லெவிஸ் நகரத்தில் உள்ள தனது இல்லத்தில் மரணமடைந்தார்.

இது குறித்து அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

ஹானர் ப்ளாக்மேன் தனது 94வது வயதில் மறைந்துவிட்டார் என்பதை மிகுந்து சோகத்துடன் தெரிவிக்கிறோம். லெவிஸ் நகரில் உள்ள தனது விட்டில் இயற்கையான முறையில் அவர் மரணித்தார். அன்பான தாயாகவும், பாட்டியாகவும் இருந்த ஹானர் ப்ளாக்மேன் திறமையான நடிகையாகவும் திகழ்ந்தார். அழகு, புத்திசாலித்தனம், தைரியம், தனித்துவமான குரல், கடின உழைப்பு ஆகியவற்றின் மிகச்சிறந்த கலவையாக அவர் இருந்தார்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஹானர் ப்ளாக்மேன் மறைவுக்கு ஜேம்ஸ் பாண்ட் தயாரிப்பாளர்கள் மைக்கேல் ஜி. வில்சன், பார்பரா ப்ரக்கோலி, இயக்குநர் எட்கர் ரைட் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in